செய்திகள்

#அம்மா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்

சென்னை, டிச.5- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் அம்மா என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, #அம்மா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் அம்மா என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.

செய்திகள்

திருப்போரூர் தொகுதி வாக்குச்சாவடி மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்போரூர் தொகுதி வாக்குச்சாவடி மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் செங்கல்பட்டு, டிச. 4 – செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வாக்குச்சாவடி மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் தொகுதி முன்னாள் எம்.பி. மரகதம்குமரவேல், மாமல்லபுரம் நகர செயலாளர் ஏ.கணேசன், மாவட்ட நிர்வாகிகள் ஆனூர் […]

செய்திகள்

வாக்கிங் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த 3 கொள்ளையர்கள் கைது

சென்னை, டிச. 4– சென்னை செம்பியத்தில் வாக்கிங் சென்ற வயதான பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, பெரம்பூர், பேரக்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் சுபாஷினி (வயது 54). கடந்த 30ம் தேதியன்று காலை பெரம்பூர், சுப்ரமணி தெரு வழியாக நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 நபர்கள் சுபாஷினியின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து […]

செய்திகள்

சுரகரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சீபுரம், டிச. 4- காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுரகரேசுவரர் கோவில். இந்த கோவில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் சோழர் காலத்து மன்னனால் கட்டப்பட்டது. நோய் தீர்க்கும் மகிமை வாய்ந்த இக்கோவில் தொல்பொருள் கட்டுப்பாட்டில் உள்ளது. 48 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த கோவிலின் திருப்பணிகள் முடிந்து இன்று காலை 6 மணியளவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை அர்ச்சகர்கள் கோபுர கலசத்தில் ஊற்றி […]

செய்திகள்

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வாலாஜாபாத் கிளைக்கு ரூ.34.40 லட்சத்தில் புதிய கட்டிடம்

காஞ்சீபுரம், டிச. 4 – காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் வாலாஜாபாத் கிளை பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இப்போது இந்த வங்கிக்கு சொந்தமாக புதிய கட்டிடம் ரூ.34.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனுடைய திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அர்ச்சகர்கள் கணபதி ஹோமம், வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தனர். பிறகு, கழக அமைப்பு செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் இந்த புதிய கட்டிடத்தை ரிப்பன் […]

செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை

திருவள்ளூர், டிச. 4-– பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்தண்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த முனி நாதன் என்பவர் தி.மு.க. கிளைச் செயலாளராக உள்ளார். இவர் தனது மைத்துனர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை பார்க்க குடும்பத்துடன் சென்றிருந்தார். மருத்துவமனைக்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது […]

செய்திகள்

ரஜினியிடம் இருந்து தன்னை பிரிக்க சதி: தமிழருவி மணியன்

சென்னை, டிச.4 நடிகர் ரஜினிகாந்திடமிருந்து தன்னை பிரிக்க சதி நடப்பதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி துவங்குப் போவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். ரஜினியின் இந்த அறிவிப்பு வெளியாகும் போதே அர்ஜுனமூர்த்தி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு தமிழருவி மணியன் அளித்துள்ள பேட்டியில், நடிகர் ரஜினிகாந்திடமிருந்து தன்னை பிரிக்க சதி […]

செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் ரூ. 10 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்

வேலூர், டிச. 4– வேலூர் மாவட்டத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் 738 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 94 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களும், கே.வி.குப்பம் வட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் 388 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் என மொத்தம் ரூ. 10 கோடியே 42 லட்சத்து […]

செய்திகள்

கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்

கடலூர், டிச. 4 கடலூரில் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் ரூ.59 ஆயிரம் மதிப்பிலும், 2 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உருபெறிக்கி மடக்கு குச்சி, கை கடிகாரம், கருப்பு கண்ணாடியும் சோ்த்து ரூ42 ஆயிரம் மதிப்பிலும் உள்பட மொத்தம் ரூ.1,01,000 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்திரசேகர் […]

செய்திகள்

கும்பகோணத்தில் சுவர் இடிந்து விழுந்து கணவன் மனைவி உயிரிழப்பு

கும்பகோணம், டிச.4 கும்பகோணத்தில் கன மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து வயதான கணவன் மனைவி உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கும்பகோணம் எலுமிச்சங்காபாளையம் சிவஜோதி நகரைச் சேர்ந்த குப்புசாமி (70), இவரது மனைவி யசோதா (65) இருவரும் மண் சுவரால் ஆன அவர்களது ஓட்டு வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் கூரையும், சுவரும் இடிந்து […]