செய்திகள்

திருவண்ணாமலை மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி

திருவண்ணாமலை, டிச.6- திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தின்போது மலை மீது ஏறுவதற்கு நிபந்தனைகளுடன் 2 ஆயிரத்து 500 […]

செய்திகள்

தமிழ் சினிமாவில் டைரக்டர் கே. பாலச்சந்தரின் மருமகள் அறிமுகம்

சென்னை, டிச. 5- மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் ‘கட்டில்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் பல சிறு கதைகளையும், நாவல்களையும் எழுதியிருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக நாடகங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர், இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் ‘கட்டில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். எற்கெனவே இப்படத்தின் சில பகுதிகள் படமாக்கப்பட்டுள்ளது. ‘கட்டில்’ திரைப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்க கணேஷ் தன்னை அணுகியதாக கீதா கைலாசம் […]

செய்திகள்

இளம் பெண் வயிற்றில் 759 நீர்க்கட்டிகள்: சவீதா மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினார்கள்

சென்னை, டிச. 5- சென்னையில் உள்ள சவீதா மருத்துவமனை மருத்துவர்கள், 29 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 759 நீர்க்கட்டிகளை அகற்றினார்கள். அந்தப் பெண், நீர்க்கட்டி காரணமாக அதிக வலியால் துடித்தார். அவரது வயிற்றில் இருந்து நீக்கப்பட்ட அந்த நீர்க்கட்டிகளில் ஒன்று கால்பந்தை விட பெரியதாக இருந்தது. அது அவரது அடி வயிற்றுப் பகுதியின் பாதி அளவுக்கு இருந்தது. அடி வயிற்றுப் பகுதியை ‘ஸ்கேன்’ செய்து பார்த்தார்கள். அப்போது 4 பெரிய நீர்க்கட்டிகள் இருந்தன. அதற்குப் பக்கத்திலேயே […]

செய்திகள்

கூகுள் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்

வாஷிங்டன், டிச.5- கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தை மறுசீரமைக்கும் ஒரு முயற்சியில் ‘ஆல்பபெட்’ நிறுவனம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அது கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனம் ஆக்கப்பட்டது. ஆல்பபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக லாரி பேஜ், தலைவராக செர்ஜே பிரின் பொறுப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் லாரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆகிய இருவரும் தங்களின் தலைமை பொறுப்பில் இருந்து விலகி […]

செய்திகள்

எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு மத்திய அரசின் 3 விருது

புதுடெல்லி, டிச.5 எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு மத்திய அரசின் 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவன் ஒரு மரம் நடும் திட்டம், தூய்மை வளாகம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றை எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்படுத்தமைக்காக மத்திய அரசின் நிறுவனமான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் 3 விருதுகள் வழங்கி கவுரவித்து உள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் டாக்டர் என்.சேதுராமன், டெல்லி என்.சி.ஆர். வளாக துணை பதிவாளர் […]

செய்திகள்

பரோடா வங்கியில் கடன் விண்ணப்பித்தவுடன் சேமிப்பு கணக்கில் பணம் வழங்கும் புதிய திட்டம்

சென்னை, டிச. 5 பரோடா வங்கியின் சார்பில் கடன் விண்ணப்பித்தவுடன், வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் பணம் வழங்கும் புதிய திட்டத்தை (‘பரோ டேப் இட்’) எக்சிகியூடிவ் டைரக்டர் முரளி ராமசாமி அறிமுகம் செய்தார். இந்தியாவின் 2வது மிகப் பெரிய வங்கியான பரோடா வங்கி 9500 கிளைகள், 13 ஆயிரத்து 400 ஏ.டி.எம்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. இது டிஜிட்டல் முறையில் கடன் வழங்க, டேப்லட் கம்ப்யூட்டர்கள் மூலம் பதிவு செய்து கடன் வழங்கும் வசதியை ‘பரோ டேப் இட்’ […]

செய்திகள்

சென்னைக் குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்

சென்னை, டிச. 5– சென்னைப் பெருநகர் குடிநீர்வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பகுதி அலுவலகம் 9–க்கு உட்பட்ட உதவிப் பொறியாளர் அலுவலகம், பணிமனை 114, தற்போது கதவு எண் 2, சுபத்திராள் தெரு, சென்னை–5 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை புதுப்பிக்க உள்ளதால், இன்று (5–ந் தேதி) முதல் பணிமனை 114 அலுவலகம் கதவு எண் 17, ஜானி ஜான் கான் தெரு, ராயப்பேட்டை, சென்னை என்ற முகவரியில் செயல்படும். பொதுமக்கள் குடிநீர் மற்றும் […]

செய்திகள்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு

சென்னை, டிச. 5– தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு சென்னையில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. டிசம்பர் 6,7,8 தேதிகளில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரீடியன் ஹோட்டலில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. உலகத்தமிழ் மாநாட்டின் தொடக்க விழா நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் சிங்கப்பூர் மலேசியா இலங்கை […]

செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை,டிச.5– வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும், முன்னர் இருந்த 5.15% ஆகவே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் […]

செய்திகள்

தெலுங்கானாவை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் பலாத்காரம்: பெண் எரிப்பு

லக்னோ,டிச.5 கடந்த வாரம் தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் அதே போன்தொரு சம்பவம் உத்தரபிரதேசத்திலும் நடந்துள்ளது. கடந்த வாரம் தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் டாக்டரை, உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து […]