செய்திகள்

அமுல்லைவாயலில் 40 ஏக்கரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள்

சென்னை ஜூன் 7- உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை பெட்ரோலியம் நிறுவனம் அமுல்லைவாயில் 40 ஏக்கரில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நிர்வாக இயக்குனர் எஸ். என். பாண்டே நட ஏற்பாடு செய்தார். இவ்விழாவில் வனத்துறை சிறப்பு செயலர் தீபக் ஸ்ரீவத்சவா, சென்னை சர்க்கிள் தலைமை வனப் பாதுகாவலர் கருண பிரியா ஆகியோர் பங்கேற்றனர். எஸ். என். பாண்டேயின் நடவடிக்கையை தீபக் ஸ்ரீவத்சவா, கருணா பிரியா பாராட்டினர். சென்னை பெட்ரோலியம் சுற்றுச்சூழல் பேண எடுக்கும் நடவடிக்கைகளை எஸ். என். […]

செய்திகள்

செல்லப் பிராணிகள் நாய், பூனைக்கு உண்ணி வராமல் தடுக்கும் ‘‘நிமைல்” வேம்பு தரை கிளீனர் அறிமுகம்

சென்னை ஜூன் 6 நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் உள்ள வீடுகளில் தரையில் கெமிக்கல் உள்ள திரவம் கொண்டு சுத்தம் செய்வதற்கு பதிலாக ‘‘நிமைல்” வேம்பு திரவம் பயன்படுத்தினால் நாய், பூனைக்கு சரும அரிப்பு ஏற்படாது. உண்ணிகள் உடலில் வராது என்று செல்லப்பிராணிகள் பயிற்சியாளர் நிர்மிதி பிராசி தெரிவித்தார். நிமைல் போன்ற தயாரிப்புகள் வேம்பின் 100% தன்மையை வழங்குகின்றன. இத்தகைய தயாரிப்புகள் பயன்படுத்த எளிதாக இருப்பதோடு, குறைவான விலையில் கிடைக்கின்றன. தரையை சுத்தம் செய்யும் திரவத்தில் […]

செய்திகள்

ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலில் ஆன்மீக கலைப்பொருள், ஆபரணங்கள் விற்பனை கண்காட்சி

சென்னை, ஜூன். 7 சென்னையில் ஷன்மதி கிரியேஷன்ஸ் சார்பில் ஆழ்வார்பேட்டை ஸ்ரீ சங்கரா ஹாலில் ஆபரணங்கள், ஆன்மீக கலைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது என்று ஷன்மதி கிரியேஷன்ஸ் மாலினி தெரிவித்தார். ஸ்ரீ சங்கரா ஹால் கண்காட்சியில் உள்ள புனிதமான வலம்புரி சங்கு வீடு, அலுவலகத்தில் இருந்தால் லட்சுமி கடாட்சம் வரும். இல்லத்தில் மன நிம்மதி கிடைக்கும் என்று மாலினி தெரிவித்தார். இக்கண்காட்சியில் ஐம்பொன்னால் ஆன நகைகள் நெக்லஸ், கல்லூரி மாணவிகள், அலுவலகம் செல்லும் பெண்கள், […]

செய்திகள்

விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் நடந்த ‘அரேபியன் நைட் ஸ்டண்ட் ஷோ’ நிறைவு

சென்னை, ஜூன் 6 – விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் 35 நாட்களாக நடைபெற்ற ‘அரேபியன் நைட் ஸ்டன்ட் ஷோ’ நிறைவு பெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ராட்டின சவாரிகள் மற்றும் வாட்டர் சாவரிகள் அதிகமாக உள்ளன. கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். அரேபியன் நைட் ஷோ இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு […]

செய்திகள்

பழனி ஜி. பெரியசாமிக்கு சவிதா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம்

சென்னை ஜூன் 7 நாமக்கல் அருகே குக்கிராமத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக அமெரிக்காவில் முதலீட்டு ஆலோசகராக திகழ்ந்த பழனி ஜி. பெரியசாமி தமிழ்நாட்டில் ஓட்டல், சர்க்கரை, கல்லூரி நிறுவி இளைய தலைமுறை தொழில் வல்லுனர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இவரது சேவையைப் பாராட்டி சவீதா பல்கலைக் கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். விழாவில் பல்கலைக்கழக வேந்தர் பழனி ஜி. பெரியசாமியின் சிறப்பை விவரித்தார். தொழிலதிபர் பழனி ஜி. பெரியசாமி அமெரிக்காவில் வாழ்ந்த […]

செய்திகள்

விழுப்புரத்தில் நவீன வசதிகளுடன் அக்‌ஷர்தம் சி.பி.எஸ்.இ. பள்ளி

விழுப்புரம், ஜூன்.7- விழுப்புரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அக்ஷர்தம் சி.பி.எஸ்.இ பள்ளியை தாளாளர் இரா.லட்சுமணன் எம்.பி. தலைமையில் முன்னாள் எம்.பி. ரபிபெர்னார்டு திறந்து வைத்தார் விழுப்புரம் பானாம்பட்டு சாலையில் புதியதாக அக்‌ஷர்தம் சென்ட்ரல் சி.பி.எஸ்.இ. பள்ளி, முற்றிலும் குளிர்சாதன வசதி உள்பட நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக பள்ளி வளாகத்தில் தேசிய கொடி மற்றும் பள்ளியின் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் […]

செய்திகள்

இருதய நோய் ஆபரேஷனில் நவீன முறை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை சார்பில் 2 நாள் சர்வதேச மருத்துவர்கள் மாநாடு

சென்னை, ஜூன்.7- இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவையா? என்பது குறித்து விவாதிக்கும் சர்வதேச மருத்துவர்கள் மாநாடு சென்னையில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இருதய சிகிச்சை நிபுணரும், சர்வதேச வால்வு சிகிச்சை முறை பயிற்சியாளருமான டாக்டர் சாய் சதீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இருதய நோயாளிகளுக்கு பாரம்பரியமாக வால்வு நோய் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மூலமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் தற்போது […]

செய்திகள்

அரசு கேபிள் டி.வி. மேலாண் இயக்குநராக பி.சங்கர் நியமனம்

சென்னை, ஜூன் 7 அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பி.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று பிறப்பித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை, ஜான் லூயிஸ் கூடுதலாகக் கவனித்து வந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் செய்தித்துறை இயக்குனராக இருப்பவர் பி.சங்கர். இவர் கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு கேபிள் டி.வி. மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் […]

செய்திகள்

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல்: 17 மண்டல அலுவலகங்களில் நாளை மக்கள் குறைதீர் முகாம்

சென்னை, ஜூன்.7– குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (8–ந் தேதி) காலை 10 மணி […]

செய்திகள்

குழாயில் நீர் பிடிப்பதில் தகராறு: சமூக ஆர்வலர் குத்திக் கொலை

தஞ்சை, ஜூன் 7– தஞ்சை மாவட்டத்தில் பொது தண்ணீா் குழாயில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பிடித்ததால் ஏற்பட்ட தகராறில், சமூக ஆா்வலர் ஆனந்த் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் தெற்கு காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் பாபு. அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 48). தமிழ்நாடு எங்கும், தண்ணீா் பிரச்சினை நிலவும் நிலையில், குமார் பொதுக் குழாயில் இருந்து டியூப் மூலம் 3 பெரிய டிரம்களில் தண்ணீா் பிடித்துள்ளார். இது தொடா்பாக ஆனந்த் […]