செய்திகள்

தங்க கடத்தலில் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது

தங்க கடத்தலில் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது ஸ்வப்னா சுரேஷிடம் என்ஐஏ நடத்திய விசாரணையில் தகவல் திருவனந்தபுரம், ஜூலை 13– தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என ஸ்வப்னா சுரேஷிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக […]

செய்திகள் போஸ்டர் செய்தி

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி

மாஸ்கோ, ஜூலை 13- பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி கண்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளை கொரோனா வைரஸ் பாதிப்பு மோசமாக பாதித்து வருகின்றது. தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வராத நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஒருபுறம் குணமாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மற்றொரு புறம் அச்சுறுத்தும் வகையில் பலி எண்ணிக்கை […]

செய்திகள் போஸ்டர் செய்தி

அரசு ஊழியர்கள் வருகை இன்று முதல் கண்காணிப்பு

தேங்கியுள்ள கோப்புகளை விரைவில் பைசல் செய்ய நடவடிக்கை காலை 10.30 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் அரசு ஊழியர்கள் வருகை இன்று முதல் கண்காணிப்பு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு   சென்னை, ஜூலை 13– பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், தேங்கியுள்ள கோப்புகளை பைசல் செய்யவும் அரசு ஊழியர்களின் வருகை விவரங்கள் இன்று முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை தினமும் தனது […]

செய்திகள்

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஜூலை 13– சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cbseresults.nic.in என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம். முன்னதாக, கரோனா பொதுமுடக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த தோ்வுகள் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் கல்வியாளர்கள் பரிந்துரைக்கு ஏற்ப தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், […]

செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க சிறப்பு அதிகாரி, எஸ்.பி. நியமனம்

சென்னை, ஜூலை 13– மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க சிறப்பு அதிகாரி, எஸ்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு காஞ்சிபுரம், திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட் டங்கள் பிரிக்கப்பட்டு செங்கல் பட்டு, தென்காசி, கள்ளக் குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை […]

செய்திகள் போஸ்டர் செய்தி

பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது

புதுடெல்லி, ஜூலை 13– நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக் கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. மேலும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறையை திறப்பது தொடர்பான வழக்கிலும் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு […]

செய்திகள்

மதுரையில் நாளை வரை முழு ஊரடங்கு நீடிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜூலை 13– மதுரையில் முழு ஊரடங்கு 14–ந்தேதி (நாளை) வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அம்மாவின் அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை […]

செய்திகள் போஸ்டர் செய்தி

வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடெல்லி, ஜூலை 13– வருமான வரி தாக்கலுக்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நேற்றைய உரையை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் அறிவித்திருந்த ரூ. 20 லட்சம் கோடி நிதித் திட்டங்கள் குறித்து விவரித்தனர். இன்றைய அறிவிப்புகளில் முக்கியமாக பார்க்கப்படுவது சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான சலுகைகள், ரியல் […]

செய்திகள்

ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் 2 ஆக்ஸிஜன் சிலிண்டர் அமைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

திருப்பரங்குன்றம்,ஜூலை.13– மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் புதியதாக நிறுவப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது :– மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளை அடுத்து கண்காணிப்பு அலுவலரும், சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலாளரும் தோப்பூர் மருத்துவமனையை தீவிரச் சிகிச்சை மருத்துவமனையாக தயார்ப்படுத்துகின்ற வகையிலே 1000 லிட்டர் லிக்யூடு […]

செய்திகள்

ஊரடங்கு விதிகளை மீறிய அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இட மாற்றம்

சூரத், ஜூலை 13– குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சூரத் நகரில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. அவர்களை பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தி உள்ளார். இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சுனிதா, ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு […]