செய்திகள்

நினைவில் நின்ற நித்யஸ்ரீ

மார்கழி இசைக்கச்சேரிகள் களைகட்டிக் கொண்டிருக்கும் தருணம் இது. கர்நாடக இசை – பரதம்… நுண்கலைகளில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ‘யுவகலா பாரதி’ விருது கொடுத்து கவுரவிப்பது மட்டுமல்ல, அவர்ளுக்கு மேடை கொடுத்து அங்கீகரிப்பதில் தனி இடம் பெற்றிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய அமைப்புகளில் ஒன்று அமரர் திருமதி. ஓய்.ஜி.பி. துவக்கிய ‘பாரத் கலாச்சார்’. இதில் ஜனவரி 5ந் தேதி நித்யஸ்ரீயின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் இரண்டு மணி நேரம் மனதிற்கு இதமளிக்குமளவிற்கு சுகமான சஹானா ராகம் ஆலாபனையுடன் தொடங்கி […]

செய்திகள்

அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மைதானத்தில் பஞ்சாப் சங்கம் சார்பில் அறுவடை விழா

சென்னை, ஜன.11– சென்னை பஞ்சாப் சங்கம் சார்பில் நடந்த விழாவில் சென்னையில் வசிக்கும் பஞ்சாபியர்கள் 1000 பேர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரி மைதானத்தில் குளிர்காலம் முடிவடைவதையொட்டியும், அறுவடை திருவிழாவையொட்டியும் கேளிக்கையில் பங்கேற்றனர். சங்கத்தின் செயலாளர் ரமேஷ் லம்பா இந்த ‘லோகிரி’ திருவிழாவை துவக்கி வைத்தார். கார்காலம் முடிவடைவதை குறிக்கும் பஞ்சாபியர்களின் முக்கிய பண்டிகையான லோகிரி பண்டிகைசென்னைபஞ்சாப் அசோசியேஷன் சார்பாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையை சேர்ந்த 1000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்ற இப்பண்டிகை சென்னை […]

செய்திகள்

சிமெண்ட் தரைகளில் கறை, பிசுக்குகளை நீக்கி கிருமிகளை அழித்து நறுமணம் தரும் ‘லைசால்’ புதிய கிளீனர் அறிமுகம்

சென்னை, ஜன.11– தமிழ்நாட்டில் 3–ல் 2 வீடுகளில் சிமெண்ட் தரைகள் உள்ளன. இதில் கறைகள், பிசுக்குகள் ஒட்டி உள்ளன. சோப்பு பவுடர், பினாயில் போன்றவற்றால் இவை நீங்காது. ஆராய்ச்சி மூலம் இதற்கு புதிய கிளீனரை லைசால் அறிமுகம் செய்து உள்ளது. இது இனிய நறுமணமும் வழங்குகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் சிமெண்ட் தரை பளபளப்பாகும் என்று இதை அறிமுகம் செய்த மார்க்கெட்டிங் டைரக்டர் சுக்லீன் அனேஜா, ஆராய்ச்சி பிரிவு தலைவர் நவீன் சர்மா தெரிவித்தனர். சுக்லீன் அனேஜா மேலும் […]

செய்திகள்

43வது சென்னை புத்தகக் காட்சியில் மணிமேகலை பிரசுரத்தின் 43 நூல்கள் வெளியீட்டு விழா

சென்னை, ஜன. 11– 43வது சென்னை புத்தகக் காட்சியில் மணிமேகலை பிரசுரத்தின் 43 நூல்கள் வெளியீட்டு விழா 12–ந் தேதி நடைபெறுகிறது. விழாவில் நீதிபதிகள், தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு நூல்களை வெளியிடுகின்றனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) நடத்தும் 43வது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 9–ந் தேதி தொடங்கி 21ந் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. சென்னையில் ஆண்டுதோறும் […]

செய்திகள்

சேமிப்பு நிலையங்களில் தேவையற்ற – மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வழங்கலாம்: சென்னை மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

சென்னை, ஜன .11 – சென்னை மாநகராட்சியில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மறுபயன்பாடு செய்து திடக்கழிவுகளை குறைக்க‘ ஸ்வாப் ஷாப் ’ என்ற புதுத் திட்டம் நடைபெறவுள்ளது என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் தினந்தோறும் சராசரியாக 5,200 டன் அளவிலான திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இக்கழிவுகள் மக்கும் மக்காத குப்பைகளாக தரம்பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகள் மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்பட்டு, மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பள்ளிக்கரணை குப்பைக் கொட்டும் […]

செய்திகள்

முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு 31ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜன. 10 புரட்சித்தலைவி அம்மா, “தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்படும். விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ. 1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்” என 14.5.2013–ம் நாளன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110 […]

செய்திகள்

சென்னையில் 13–ந்தேதி திருப்பாவை விழா போட்டிகள்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பரிசு வழங்குகிறார்

சென்னை, ஜன. 11– சென்னையில் 13–ந் தேதி அன்று மாநில அளவில் திருப்பாவை விழா போட்டிகள் நடைபெறவுள்ளது. பாவை விழா பரிசளிப்பு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையேற்று பரிசு வழங்குகிறார். இந்து சமய அறநிலையத்துறை சார்பாக சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் புதிய திருமண மண்டபத்தில் (பசுமை வழிச் சாலை, பறக்கும் இரயில் நிலையம் அருகில்) 13–ந் தேதி காலையில் மாநில அளவிலான பாவை விழா போட்டிகள் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, […]

செய்திகள்

டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பல் மருத்துவமனையில் அதிநவீன ‘ஸ்கேன்’ கருவி அறிமுகம்

சென்னை, ஜன.11- சென்னையில் உள்ள டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில் அதிநவீன ‘ஸ்கேன்’ கருவியின் பயன்பாட்டை மத்திய உள்துறை அமைச்சகத்தின் முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் கே.விஜயகுமார் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் டாக்டர் எஸ்.எம்.பாலாஜியின் பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கடினமான அறுவை சிகிச்சைகளும் சுலபமாக செய்யப்படுகின்றன. எனவே வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பாலாஜி பல் மற்றும் […]

செய்திகள்

கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் ரூ.1600 கோடி வரை பங்கு வெளியீடு செய்ய செபி அமைப்புக்கு விண்ணப்பம்

மும்பை, ஜன. 11– கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனம் (காம்ஸ்) பங்கு வெளியிட அனுமதி வேண்டி பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்து இருக்கிறது. இந்த வெளியீடு மூலம் இந்நிறுவனம் ரூ.1,600 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனம் தனது மூலதன தேவைகள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியைத் திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. எனவே அதற்கு அனுமதி வேண்டி செபி […]

செய்திகள்

வேலூர் தமிழ்ச் சங்கம், ஊரீசு கல்லூரி சார்பில் தமிழர் திருநாள் – திருவள்ளுவர் விழா

வேலூர், ஜன.11– வேலூர் தமிழ்ச் சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் –திருவள்ளுவர் விழாவில் இலங்கையின் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன், விஐடி வேந்தர் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலூர் தமிழ்ச் சங்கம் மற்றும் ஊரீசு கல்லூரி இணைந்து தமிழர் திருநாள் விழா –திருவள்ளுவர் விழா ஊரீசு கல்லூரி காபு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கையின் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் […]