செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக விண்வெளி பயணம்

வாஷிங்டன், ஜூன்.6- இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக விண்வெளி பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான சுனிதா ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக நேற்று விண்வெளிக்குச் சென்றார். பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’-ன் ‘ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பறந்தார். அவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி : எடப்பாடி பழனிசாமி அறிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் சென்னை, ஜூன் 5-– 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– அண்ணா தி.மு.க. மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகளின்‌ வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப்‌ பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. “கான முயலெய்த அம்பினில்‌ யானை பிழைத்தவேல்‌ ஏந்தல்‌ இனிது” – […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.3.7 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை, ஜுன் 5– திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வைகாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில், ரூ.3.7 கோடியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந் தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்; பா.ஜ.க.– காங்கிரஸ் இடையே கடும் போட்டி

கருத்துக்கணிப்பு பொய்யானது பா.ஜ.க. கூட்டணி – 300; இந்தியா கூட்டணி – 225 முன்னிலை * மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்கரி முன்னிலை * நடிகை கங்கனா ரனாவத் முன்னிலை * மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவு * வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் முன்னிலை பா.ஜ.க. கூட்டணி – 300; இந்தியா கூட்டணி – 225 முன்னிலை புதுடெல்லி, ஜூன் 4– நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதியம் […]

Loading

செய்திகள்

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்: கிங் மேக்கர், கிங் ஆக வாய்ப்பு?

விசாகப்படிடனம், ஜூன் 4– ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் 16 இடங்களை பெற்றுள்ளதால், கிங் மேக்கராக ஆவார் என்று கூறப்படும் நிலையில், நிதிஷ் குமார் கட்சியும் 15 இடங்களில் வென்றுள்ளதால், அவருக்கும் அந்த வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. சந்திரபாபு நாயுடு அரசியல் வாழ்க்கை 1970 களில் தொடங்கியது. அவர் முதலில் காங்கிரஸ் கட்சியிலேயே தனது அரசியலைத் தொடங்கினார். 1978ஆம் ஆண்டில், அவர் சந்திரகிரி சட்டசபை தொகுதியில் வென்றார். 1980 […]

Loading

செய்திகள்

வடமாநிலங்களில் கொளுத்தும் வெயில்; 122 டிகிரி பதிவு: விலங்குகளும், பறவைகளும் செத்து மடிக்கின்றன

ராஞ்சி, ஜூன்.4-– வடமாநிலங்களில் கொளுத்தி வரும் கடும் வெயில் காரணமாக விலங்குகளும், பறவைகளும் உயிரிழந்து வருகின்றன. வடமாநிலங்களில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ராஜஸ்தான் தொடங்கி மேற்கு வங்கம் வரை வெயில் தீவிரமாக இருந்தது. பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஒடிசா, ஜார்க்கண்டின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், […]

Loading

செய்திகள்

இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா

இந்தூர், ஜூன் 4– மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 1,89,566 வாக்குகளைப் பெற்று நோட்டா இரண்டாம் இடம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 1.20 மணி நிலவரப்படி இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வானி 10,63,842 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் நோட்டா 1,69,228 வாக்குகளைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் லக்‌ஷ்மன் சோலங்கி 44,828 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Loading

செய்திகள்

வாக்கு எண்ணிக்கை எதிரொலி: பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

மும்பை, ஜூன் 4– 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி பங்குச்சந்தையில் 3000 புள்ளிகள் வரையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதலில் தபால் வாக்குகள் […]

Loading

செய்திகள்

ஜெகன்மோகன் கட்சிக்கு கடும் பின்னடை: ஆட்சியை கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் 133 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை பிரதமர் மோடி வாழ்த்து அமராவதி, ஜூன் 4– ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றினார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 38 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி; தர்மபுரியில் பா.ம.க. முன்னிலை

அண்ணாமலை, ஓ.பி.எஸ். பின்னடைவு சென்னை, ஜூன் 4– தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலையில் இருக்கிறார். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19–ந்தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் இன்று நடைபெற்றது. முதலில் காலை 8 மணிக்கு தபால் […]

Loading