செய்திகள்

தி.மு.க.வை இல்லாமல் ஆக்கிவிடுவோம் என கூறியவர்கள் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள்

மோடிக்கு டி.ஆர்.பாலு பதில் சென்னை, பிப்.29–- தி.மு.க.வை இல்லாமல் ஆக்கி விடுவோம் என கூறியவர்கள் வரலாற்றில் காணாமல் போய் விட்டார்கள் என்று பிரதமர் மோடி சவாலுக்கு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– அரசு முறை பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தான் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் மோடி. திருப்பூர் கூட்டத்தில் ஜெயலலிதாவை வானளாவப் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உயர்தர சேவைகளுடன் மகிழ்ச்சியான ரெயில் பயணங்கள்: உறுதி செய்கிறார் மோடி

ஆர்.முத்துக்குமார் இந்திய பொருளாதாரத்தின் அதிமுக்கிய அங்கமாக இருக்கும் போக்குவரத்து துறையில் பெரிய முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பது ரெயில்வே துறையில் என்பதை அறிவோம். ஆனால் லாபகரமாக இயங்குகிறதா? என்று உற்று பார்த்தால் நஷ்டத்தில் இயங்குவது தெரிகிறது. காரணம் ரெயில் பயணிகளுக்கு குறைந்த கட்டண சேவையே இதுவரை குறிக்கோளாக கொண்டு இயங்கிக் கொண்டு இருப்பது தான் உண்மை. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் முதியோர் சலுகைகள் அகற்றப்பட்டது. பிற ரெயில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் எல்லாம் விலக்கப்பட்டது. இதன் காரணமாக வருவாய் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி : பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

பல்லடம், பிப்.28-– பிரதமர் மோடி, பல்லடத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, ‘இந்தியா’ கூட்டணியால் மக்களுக்கு பயன் கிடைக்காது என்று பேசினார். தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பயணம் மேற்கொண்ட அவர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்தார். இதையொட்டி, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர […]

Loading

செய்திகள்

அப்பல்லோ மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சை திட்டம் அறிமுகம்

சென்னை, பிப். 28– பெருங்குடல் (ரெக்டல் – ஆசனக் குடல்) புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஒருங்கிணைந்த உயர்நுட்ப சிசிச்சைகள் அளிக்கப்படும். உறுப்புகளை அகற்றாமல் பாதிப்பை சரி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடந்தது. அதில் அப்பல்லோ மருத்துவக் குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கலந்து கொண்டு ஒருங்கிணைந்த பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சை திட்டத்தை தொடங்கி […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கடல் அலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வுக் குழுவினா் வடிவமைத்துள்ளனா். ‘சிந்துஜா-1’ என அழைக்கப்படும் இந்தக் கருவி தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டா் ஆழத்தில் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி தற்போது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Loading

செய்திகள்

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் 15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

சிம்லா, பிப். 28– இமாசல் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்பட பாஜகவின் 15 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்தும், 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்தியது. இதனால், வழக்கம்போல், பாரதீய ஜனதா கட்சி குதிரை பேரம் நடத்தி 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாற வைத்ததுடன், […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம், பிப். 28– பலத்த சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதற்கேற்றாற் போல் ராமேசுவரம் கடல் பகுதி இன்று காலை வழக்கத்தைவிட மாறுபட்ட நிலையில் காணப்பட்டது. இதற்கிடையே மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் […]

Loading

செய்திகள்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 24-–ந் தேதி முதல் காலியாக உள்ளது

சபாநாயகரின் அறிவிப்பு அரசிதழில் வெளியீடு சென்னை, பிப். 28– விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 24-ந்தேதி முதல் காலியாக உள்ளது என்ற சபாநாயகரின் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் […]

Loading

செய்திகள்

தூக்கத்தில் அமைதி தரக்கூடிய சொற்களை கேட்டால் இதயத்தின் செயல்பாடு சிறக்கும்: ஆய்வுத் தகவல்

சென்னை, பிப். 28– அமைதி தரக்கூடிய சொற்களை தூக்கத்தில் கேட்கும் போது, நமது இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உறக்கம் என்பது மனித உயிர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உறக்கம் தொலைத்தால் எதுவும் சரியாக நடக்காது என்பது தான் நியதி. தேவையில்லாத குழப்பம், மன வேதனை போன்றவை உறக்கத்தை பாதிக்கிறது. நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் […]

Loading

செய்திகள்

முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கடலூர், பிப். 28– பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 5 இடங்களில் சோதனை இந்தநிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக […]

Loading