செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி

சிவகாசி, ஏப். 26– சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் […]

Loading

செய்திகள்

கோவையில் விஜய் “ரோடு ஷோ”: வழிநெடுக உற்சாக வரவேற்பு

5 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற தொண்டர்கள், ரசிகர்கள் கோவை, ஏப். 26– கோவையில் த.வெ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வந்த நடிகர் விஜய் ‘ரோடு ஷோ’ நடத்தினார். 5 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்று தொண்டர்கள் வழிநெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அண்ணா தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் […]

Loading

செய்திகள்

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதி சடங்கில் பங்கேற்பு வாடிகன், ஏப். 26– வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலுக்கு டிரம்ப் மீண்டும் கண்டனம்

பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு உறுதுணை: அமெரிக்கா அறிவிப்பு வாஷிங்டன், ஏப். 26– காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தாகுதல் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் […]

Loading

செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு : இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர், ஏப். 26– காஷ்மீர் எல்லைக்கோடுப் பகுதியின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22–ந்தேதி பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கர்நாடகம், கேரளம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்- ஏ- தொய்பா பயங்கரவாத […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் : சென்னை, ஏப்.26- தமிழகத்தில் இந்த நிறுவனத்தால் தற்போது 266 ஆதார் பதிவு உள்ளது. ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் உள்ளாட்சி அலுவலகங்களில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * தமிழகத்தில் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு:

அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு சென்னை, ஏப்.26- ”மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும்” என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டத்தொடரில், மேட்டூர் அணை திறப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து, சட்டசபையில் துரைமுருகன் பேசியதாவது: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்களில் மண் திட்டுகள் உள்ளது. தண்ணீர் தங்குயின்றி செல்ல, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5,021 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாசன கால்வாய்களை […]

Loading

செய்திகள்

சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடியில் சர்வதேச தரத்தில் தைவான் தொழில் பூங்கா

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு : சென்னை, ஏப்.26- சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடியில் தைவான் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். சட்டசபையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்த நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் அமைக்கப்படும். * […]

Loading

செய்திகள்

மாதந்தோறும் ரூ.200 கட்டணத்தில் வீட்டுக்கும் அதிவேக இணையதள சேவை

சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு : சென்னை, ஏப்.26- மாதந்தோறும் ரூ.200 கட்டணத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சட்டசபையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்கள் சேவை துறை மானியக்கோரிக்கை யின்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார். எங்களது துறை சார்பாக பொதுமக்களுக்கு, சுமார் 300 இடங்களில் இலவச வைபை சேவை அளித்து கொண்டு இருக்கிறோம். அம்மா உணவகம், பஸ் நிலையம் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

போதை..! – ராஜா செல்லமுத்து

இத்தனைக்கும் பிரபாகரன் ஐந்தாவது தான் படித்துக் கொண்டிருந்தான். இந்த வயதில் அவனுக்கு இப்படி ஒரு பழக்கமா? இவனுக்குள் எப்படி அது நுழைந்தது ? இந்தப் பிஞ்சு வயதில் நஞ்சை கலந்தது யார்? என்று மயக்கம் போட்டு விழுந்தவனைக் காரில் தூக்கிப் போட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரபாகரனைச் சார்ந்த உறவினர்கள் . அம்மா அழுது கொண்டிருந்தாள். கேவிக் கேவிக் எதையோ பேசிக் கொண்டிருந்தார், பிரபாகரனின் அப்பா. ” இந்தப் பள்ளிக்கூடம் சரி இல்லைங்க எல்லாரையும் […]

Loading