செய்திகள்

ஜூலை 23 முதல் 31 ந்தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம்: தென்னக ரெயில்வே அறிவிப்பு

சென்னை, ஜூலை 16– ஜூலை 23 ந்தேதி முதல் 31 ந்தேதி வரையில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரெயில் (வண்டி எண்: 20691) ஜூலை 23 முதல் ஜூலை 31 வரையும், நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 21 ந்தேதி மாலை 3 மணிக்கு […]

Loading

செய்திகள்

42 பெண்களை துடிக்கத் துடிக்க கொன்று குப்பை கிடங்கில் புதைத்த சீரியல் கில்லர்

சென்னை, ஜூலை 16– 42 பெண்களை துடிக்கத் துடிக்க கொன்று குப்பை கிடங்கில் புதைத்த கென்ய சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளார். கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி, வெட்டப்பட்டும் சிதைக்கப்பட்டும் இருந்த 9 பெண்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த கொடூர கொலை குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பாதிப்பக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற 138 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னை, ஜூலை16- சென்னை விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற 138 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வாலிபரை கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு அதிகாலையில் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் […]

Loading

செய்திகள்

சாதிப் பெயரை இழிவுபடுத்தவோ, நகைச்சுவைக்கோ, அரசியலுக்கோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை

தமிழக அரசுக்கு பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை சென்னை, ஜூலை 16-– சாதிப் பெயரை இழிவுபடுத்தவோ, நகைச்சுவைக்கோ, அரசியலுக்கோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும், அவமதிப்பையும் […]

Loading

செய்திகள்

ரூ. 3.81 கோடியில் 10 புதிய அரசு பஸ்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூலை 16-– ரூ. 3.81 கோடியில் 10 புதிய அரசு பஸ்களை முதவமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2023, 2024-ம் ஆண்டிற்கு 247 புறநகர் பஸ்கள் மற்றும் 64 நகர பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் பழைய பஸ்களுக்கு மாற்றாக இதுவரை 134 புறநகர் பஸ்கள் மற்றும் 12 நகர பஸ்கள் புதிதாக கூண்டு கட்டி தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது இப்பகுதி மக்கள் பயனடையும் […]

Loading

செய்திகள்

காலை உணவு திட்டம் குறித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு பதில்

சென்னை, ஜூலை 16– காலை உணவு திட்டம் குறித்த பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நேற்று சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், ‘காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்கவேண்டும். எனவே, பள்ளி மாணவர்களுக்கு வெறும் சாப்பாடு, இட்லி, தோசை என கொடுக்காமல், சிறுதானியங்கள், முட்டை உள்பட […]

Loading

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு வழங்கப்படும்

சென்னை, ஜூலை 16–- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். கடந்த 2021–-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோம் என்று அறிவித்தார். அதன்படி அவர், கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் 15–-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 16– பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த படுகொலை தொடர்பாக 11 பேரை […]

Loading

செய்திகள்

மின் கட்டண உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை , ஜூலை 15:வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டுக்கு மேல் மின்சார கட்டணம் உயர்வு. ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 என இருந்த கட்டணம், ரூ. 6.45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை இருந்த கட்டணம், ஏற்கனவே ரூ. 8.15 இருந்து தற்போது ரூ. 8.55-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 […]

Loading

செய்திகள்

நூறாண்டு  அரச மரத்தை மீட்ட எம்பி

தேனி, ஜூலை 15 – தேனி மாவட்டம் சின்னமனூரில் நூறாண்டு பழமை வாய்ந்த அரச மரத்தை அகற்ற திட்டமிட்டிருந்த நிலையில், அதை மீட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். சின்னமனூர் பகுதியில் உள்ள இந்த மரத்தை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தங்கதமிழ் செல்வன் நகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களின் கருத்துகளை கேட்டுத் தெரிந்த அவர், மரத்தின் கிளைகளை […]

Loading