செய்திகள்

சாய்னா நெவால் வாழ்க்கை திரைப்படம்: 26–ந் தேதி வெளி வருகிறது

மும்பை, மார்ச் 2– பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டு 26–ந் தேதி வெளியிடப்படுகிறது. பிரபல வீராங்கனையான 30 வயது சாய்னா நெவால் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய சாய்னா நேவால் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். அதில் 11 சூப்பர் சீரிஸ் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். […]

செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: வெற்றி முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

அகமதாபாத், மார்ச் 2– இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது. அதைத் தொடர்ந்து ஆமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி […]

செய்திகள்

யார்–யாருக்கு தபால் ஓட்டு?

சென்னை, மார்ச் 2– யார்–யாருக்கு தபால் ஓட்டு? என்று விவரத்தை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அரசுடன் இந்திய தேர்தல் ஆணையம் கலந்து பேசி, மேலும் சில நபர்களை அத்தியாவசிய சேவையின் கீழ் வரும் நபர்களாக அறிவிக்கிறது. அதன்படி, ரெயிலை இயக்குபவர்கள் (லோகோ பைலட்), உதவி பைலட், ‘மோட்டார் மென்’, கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள் (டி.டி.இ.), ஏ.சி. பெட்டி உதவியாளர்கள், […]

செய்திகள்

இன்ஸ்டகிராமில் 100 மில்லியன் ரசிகர்கள்: விராட் கோலி புதிய சாதனை

மும்பை, மார்ச் 2– இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளது. அதேபோல், உலக அளவில் 100 மில்லியன் பாலோயர்களை எட்டிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டகிராமில் 75 மில்லியன் பேர் பின்தொடரும் முதல் ஆசிய வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றார். நேற்று அவர் […]

செய்திகள்

தபால் ஓட்டு முறை பற்றி உரியவர்களுக்கு விளக்கவேண்டும்: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 2– 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் நடைமுறையை தெளிவாக விளக்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் […]

செய்திகள்

6 மற்றும் 7–ந்தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை, மார்ச் 2– வருகிற 6 மற்றும் 7–ந்தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:– “2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிரந்து கடந்த பிப்ரவரி 25–ந்தேதி முதல் மார்ச் 5–ந்தேதி வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தேர்தலில் போட்டியிட விருப்ப […]

செய்திகள்

செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெறும் தலைவர்கள் பட்டியல்

விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெறும் தலைவர்கள் பட்டியல்: 22–ந் தேதிக்குள் அனுப்ப தலைமைத் தேர்தல் அதிகாரி வேண்டுகோள் சென்னை, மார்ச் 2– செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெறும் தலைவர்களின் பெயர் பட்டியலை அரசியல் கட்சிகள் இம்மாதம் 22–ந் தேதிக்குள் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிடவேண்டும். இதுசம்பந்தமாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 77–-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் […]

செய்திகள்

இரவு 10 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடிக்கவேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு புதிய நிபந்தனைகள்

* கட்சிக்கூட்டம், ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு இணையதளம் வழியாக அனுமதி கோரலாம் * இணையதளம் மூலமே மனுக்களைப் பரிசீலித்து அனுமதி வழங்கப்படும் * தேர்தல் நடத்தை விதிமீறினால் செயலி மூலம் புகார் சொல்லலாம் * இரவு 10 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடிக்கவேண்டும் எந்த ஒரு நிகழ்வுக்கு 48 மணி நேரம் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு புதிய நிபந்தனைகள் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தகவல் முகக்கவசம் அணிவது கட்டாயம் சென்னை, மார்ச் 2– தேர்தல் […]

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது

சென்னை, மார்ச் 2– சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 608 அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.608 குறைந்து, ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.76 குறைந்து, ரூ.4,266 […]

செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி, மார்ச் 2– பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பு குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், நாட்டில் பெட்ரோல்,டீசல் மீதான வரி இருமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும், மார்ச் மத்தியில் இது தொடர்பாக முக்கிய முடிவு எட்டப்படும் எனவும் தெரிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கைக் […]