செய்திகள்

எம்பி பதவியையும் ராஜினாமா செய்த இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஜான்சன்

லண்டன், ஜூன் 10– பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜிநாமா செய்துள்ளார். 2019 இல் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சன், கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது. இது மட்டுமன்றி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போரிஸ் ஜான்சனின் கட்சியைச் […]

Loading

செய்திகள்

தென்மேற்கு பருவமழை: கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம், ஜூன் 10– கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் வரை மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. ஜூன் 8ஆம் தேதி கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு […]

Loading

செய்திகள்

விபத்தில் சிக்கி காட்டில் தொலைந்த 4 குழந்தைகள் 40 நாட்களுக்கு பின் மீட்பு

கொலம்பியா, ஜூன் 10– கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி, தொலைந்துபோன 4 பழங்குடியின குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் உட்பட 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. அமேசான் வன பகுதிக்குள் இந்த விமானம் நொறுங்கி விழுந்ததால், அதனை கண்டறிவதில் மீட்புக் குழுவினர் சிரமப்பட்டனர். தொடர்ந்து 40 நாட்களாக விமானத்தை தேடும் பணி தீவிரமாக […]

Loading

செய்திகள்

தேனிலவுக்கு சென்ற டாக்டர் தம்பதி இந்தோனேசியாவில் நீரில் முழ்கி பலி

ஜகார்தா, ஜூன் 10– இந்தோனேசியாவிற்கு தேனிலவு கொண்டாட சென்ற பூந்தமல்லியைச் சேர்ந்த புதுமண மருத்துவ தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விபூஷ்ணியா (வயது 25). இவர் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் மருத்துவரான லோகேஸ்வரன் (வயது 27) என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 1 ந்தேதி பூந்தமல்லி தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடந்துள்ளது. நீரில் மூழ்கி பலி இதற்கிடையில், கடந்த சில […]

Loading

செய்திகள்

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் உலக அழகிப் போட்டி–2023

டெல்லி, ஜூன் 9– மிகவும் எதிர்பார்க்கப்படும் 71 வது உலக அழகிப் போட்டி, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் உலக அழகிப்போட்டி கடைசியாக 1996இல் நடைப்பெற்றது. இந்நிலையில் 71வது உலக அழகி இறுதிப் போட்டியின் புதிய வீடாக இந்தியாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் தனித்துவமான மாறுபட்ட கலாச்சாரத்தையும், உலகத் தரம் வாய்ந்த இடங்களையும் உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்; 70,000 புள்ளிகளைத் தொடத் தயாராகும் பங்குச் சந்தை

ஆர்.முத்துக்குமார் இந்தியப் பங்குச் சந்தை 6 மாதங்களுக்கு முன்பு சில நிமிடங்களுக்கு 63,000 புள்ளிகளை தொட்டது. ஆனால் மீண்டும் சரிந்து விட்டது. இவ்வாண்டின் துவக்கத்தில் அதானி குழுமம் சந்தித்த சிக்கலில் மொத்த பங்குச் சந்தையும் 60,000 புள்ளிகளையும் விட குறைந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை ஸ்திரமாகவே இருக்கிறது. பல துறைகளின் பங்குகள் வர்த்தகம் உயர்ந்தும் உள்ளது. இதனால் சமீபமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு 62,000 புள்ளிகளை தொட்ட பிறகு மீண்டும் புதிய […]

Loading

செய்திகள்

ராணுவ பகுதிகளில் பொருத்தப்பட்ட சீன தயாரிப்பு சிசிடிவி கேமராக்கள்: அகற்ற இங்கிலாந்து அரசு முடிவு

லண்டன், ஜூன் 9– இங்கிலாந்தின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சீன தயாரிப்பு கண்காணிப்பு கேமராக்களை அகற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்ற முடிவு செய்திருப்பதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் கொண்டு வரப்படவுள்ள மசோதாவில் இந்த அம்சம் இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க பகுதிகளில் […]

Loading

செய்திகள்

வாழ அதிகம் செலவாகும் இந்திய நகரங்கள்: சென்னை 3 வது இடம்

சீனாவின் ஹாங்காங் நகரம் உலகில் முதலிடம் டெல்லி, ஜூன் 9– வாழ்வதற்கு அதிகம் செலவாகும் இந்திய நகரங்களில், மும்பை தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் நிலையில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் வசிப்பதற்கு அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த மெர்சர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக, 5 கண்டங்களைச் சேர்ந்த 227 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்திய நகரங்களின் இடம் இந்தப் பட்டியலில் இந்தியாவில் […]

Loading

செய்திகள்

மனு தருமத்தை படித்து பாருங்கள்: 17 வயது சிறுமி கர்ப்பமடைந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற கருத்தால் சர்ச்சை

காந்திநகர், ஜூன் 9– பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 17 வயது சிறுமி கர்ப்பமடைந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி, மனு தர்மத்தை படித்துப் பார்த்தால்14, 15 வயதில் கர்ப்பமடைவது பெரிய விசயமல்ல என்று சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாகியுள்ள 17 வயது சிறுமியின் தந்தை, குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி சமீர் ஜேஜ தவே விசாரித்தார். தற்போது சிறுமி 8 மாத […]

Loading

செய்திகள்

கேரளாவிலிருந்து பெண்களுக்கான தனி ஹஜ் பயணிகள் விமானம் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்பட்டது

கோழிக்கோடு, ஜூன் 9– ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் பெண்களால் இயக்கப்பட்டு முதன் முதலாக முழுதும் பெண்கள் மட்டுமே பயணிக்கும், ஹஜ் பயணிகள் விமானம் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து நேற்று புறப்பட்டது. டாடா குழுமத்தின் சர்வதேச பட்ஜெட் நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஏஐஎக்ஸ்எல்) நேற்று இந்தியாவின் முதல் முழு பெண் ஹஜ் விமானத்தை இயக்கியது. இதில் சுமார் 145 பெண் பயணிகள் பயணித்தனர். இந்த சிறப்பு விமானத்தின், அனைத்து முக்கியமான விமானப் பணிகளிலும் முழுக்க […]

Loading