செய்திகள்

இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் 2 இடங்களில் அம்பானி, அதானி

சென்னை, ஏப். 7– 2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அம்பானி முதலிடம் இதில் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி […]

செய்திகள்

இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்பு

ஜெனீவா,ஏப். 7– இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா […]

செய்திகள்

எடப்பாடி தொகுதியில் 85 சதவீதம்; கொளத்தூரில் 60 சத வாக்குப்பதிவு

சென்னை, ஏப். 7– தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின என […]

செய்திகள்

அதிகரிக்கும் கொரோனாவால் 4 வாரம் நெருக்கடியானதாக இருக்கும்- மத்திய சுகாதார துறை தகவல்

புதுச்சேரி, ஏப்.7– இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வி.கே.பால் கூறுகையில், நாட்டில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உயர்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு […]

செய்திகள்

முன்பதிவு செய்தால் மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை

புதுச்சேரி, ஏப். 7– ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பெற வருகிற 9–ம் தேதி முதல் முன்பதிவு செய்வது அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘ஹலோ ஜிப்மர்’ என்ற செல்போன் செயலி மூலம் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகே‌‌ஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை வளாகங்களில் கூட்ட […]

செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி: பிரதமருக்கு ஐஎம்ஏ பரிந்துரை

புதுடெல்லி, ஏப். 7– நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 3 நாள்களாக இந்தியவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது 1 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில், இந்திய மருத்துவக் கழகம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி […]

செய்திகள்

திருச்சி, திண்டுக்கல், மதுரை, கரூரில் வெப்பநிலை உயரும்: 5 மாவட்டங்களில் இடி, மழை

சென்னை, ஏப். 7– தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கரூர், ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். 5 மாவட்டங்களில் மழை ஏனைய உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரி முதல் 2 செல்ஸியஸ் வரை உயரக்கூடும். கடலோர மாவட்டங்களில் […]

செய்திகள்

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்

புதுடெல்லி, ஏப். 7– ஒரு நாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறதது. இந்நிலையில் கொரோனாவால் கடுமையான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, […]

செய்திகள்

பார்த்திபனுக்கு கொரோனா தடுப்பூசியால் கண், காது, முகம் வீக்கம்: ஒவ்வாமை இருந்ததால் பாதிப்பு

சென்னை, ஏப். 7– ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினை இருந்ததால், 2 வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட எனக்கு கண், காது, முகம் வீங்கிவிட்டது என, நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சில காலம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 45 […]

செய்திகள்

மொத்த வாக்காளர்கள் 90 பேர்: மெசினில் 181 ஓட்டுகள் பதிவு

அசாமில் 6 அதிகாரிகள் சஸ்பெண்ட் அசாம், ஏப். 6– மொத்த வாக்காளர்கள் 90 பேர் மட்டுமே உள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் 181 ஓட்டுகள் பதிவான நிலையில், 6 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அசாமில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மார்ச் 27ஆம் தேதி முதற்கட்டம், ஏப்ரல் 1ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இன்று 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுடன் அங்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. முதற்கட்ட தேர்தல் தொடங்கியதில் […]