செய்திகள்

புயல் வெள்ள சேதங்களை சீர்செய்திட ரூ.5,060 கோடி உடனடியாக வழங்குங்கள்

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் சென்னை, டிச.6– தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக்கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (5–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமான […]

Loading

செய்திகள்

சட்டத்தின் வழியே மக்களை சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர் : அம்பேத்கருக்கு ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, டிச.6– இன்று அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப்பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்! உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர். அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம். எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கிச் சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் […]

Loading

செய்திகள்

47 ஆண்டுகள் இல்லாத கனமழை சென்னை தப்பியது எப்படி?

ஸ்டாலின் பேட்டி போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் சென்னை, டிச.6-– வெள்ள நிவாரணப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கினார். கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டதோடு, யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் […]

Loading

செய்திகள்

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் ஸ்டாலின் 2–வது நாளாக ஆய்வு

தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் சென்னை, டிச. 6– சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் […]

Loading

செய்திகள்

சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழ்நாடு அரசு அறிவிப்பு சென்னை, டிச.6– சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (7–ந் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7–ந் தேதி) […]

Loading

செய்திகள்

மோடி குறித்து பாகிஸ்தான் ராணுவ வீரர் சூளுரை: வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத், டிச. 06– மோடி குறித்து பாகிஸ்தான் ராணுவ வீரர் அடாவடியாக சூளுரைக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து காஷ்மீரில் அவ்வப்போது இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. வைரல் வீடியோ இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கும், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மழைநீர் சேமிப்பை உறுதி செய்தார் ஜெயலலிதா; சுரங்க மழை நீர் வழி கண்டு சென்னை மாநகரம் பலனடைய களம் இறங்குவாரா ஸ்டாலின்?

ஆர். முத்துக்குமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள்– டிசம்பர் 5–ம் தேதி, தமிழகமெங்கும் அஞ்சலி செலுத்தும் தினமாக இருந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை, டிசம்பர் 4 அன்று பெய்த வரலாறு காணாத மழைப் பொழிவின் பின்விளைவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஒருமுறை ஜெயலலிதா கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கையில் ஓரு பத்திரிகையாளர் அது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, சிறு நகைப்புடன் கூறிய ஓர் சொற்தொடர், ‘எனக்குத் தண்ணி ராசி உண்டு’ […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம் செய்யும் மின்சார மொபட்

இந்திய ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு! வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணத்தை மேற்கொள்ளும் வகையிலான மின் வாகனங்களை ஐதராபாத் ஐஐடி மாணவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐஐடி ஐதராபாத் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ப்யூர் எனர்ஜி நிறுவனம் ‘பியூர் இவி’ என்ற பெயரில் மின் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த பியூர் இவி நீடித்து உழைக்கும் மற்றும் அதீத திறனை வெளிப்படுத்தும் இரண்டு சக்கர மின் வாகனங்களை இந்தியச் சாலைகளுக்கு அறிமுகம் […]

Loading

செய்திகள்

‘மிக்ஜம்’ புயல் ஆந்திராவில் கரையை கடந்தது

அமராவதி, டிச.6- சென்னையை புரட்டிப்போட்ட ‘மிக்ஜம்’ புயல் ஆந்திராவில் நேற்று பகலில் கரையை கடந்தது. வங்கக்கடலில் கடந்த 27-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பேய்மழை கொட்டியது. குறிப்பாக இந்த புயல் சென்னையை ஒட்டிய வட கடலோர பகுதிகளில் வளைந்து கடந்து சென்றதால் அதன் […]

Loading

செய்திகள்

2014ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் உயர்வு

புதுடெல்லி, டிச.6- 2014ம் ஆண்டுக்கு பிறகு, மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:- கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் அதிகரித்துள்ளது. எம்.பி.பி.எஸ். சீட்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-ல் இருந்து 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது. இது, 112 […]

Loading