டெல்லி, ஏப். 29– இந்தியாவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 788 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 124 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,37,031ஆக […]