செய்திகள்

புரோ கபடி லீக்: புனே, தபாங் டெல்லி அணிகள் வெற்றி

புனே, டிச. 17– புரோ கபடி லீக் போட்டியில் புனே, தபாங் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன. 12 அணிகள் இடையிலான 10-வது புரோ கபடி லீக் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனே அணி 49-–19 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை எளிதில் தோற்கடித்தது. புனே அணியில் மோஹித் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

“நம்மைக் காக்கும்–48 திட்டம்”: 2 லட்சம் குடும்பங்களின் குதூகலத்தை காப்பாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினின் புதுமையான சிந்தனை

–:கட்டுரை: – மா.இளஞ்செழியன் ஒரு அரசு என்பதாகட்டும் நாடு என்பதாகட்டும் அது வெறுமனே நிலத்தை அடிப்படையாக கொண்டது இல்லை. மாறாக முழுக்க முழுக்க மனிதனை மனித சமூகத்தை அடிப்படையாக கொண்டதுதான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த அடிப்படையில்தான் சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூக நீதி (Social justice) என்ற சொல்லாடல் அரசியலில் மிகவும் பேசப்படும் ஒன்றாக உள்ளது. திமுகவும் சரி, அதிமுகவும் சரி, தந்தை பெரியார் வலியுறுத்தி கூறியபடி, “மனிதனை நினை” என்ற […]

Loading

சினிமா செய்திகள்

கலங்கரை விளக்கம் – காவியமானவன் கமல்!

‘‘கால நதியில் கரையாதவன் ; எந்தக் காற்றுக்கும் மழைக்கும் அசையாதவன்; நீலவானம் போல் விரிவானவன் ; எந்த நிலையிலும் தன் வழி மாறாதவன்….!’’ கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள் தான் சட்டென்று நினைவுக்கு வரும் – மீண்டும் ‘ஆளவந்தானோடு’ களம் இறங்கும் எஸ்.தாணுவையும், கமலையும் பார்க்கும்போது. 2K Kids, 2K Kids என்று பேச்சு வழக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறோமே அந்த 2K Kids (2000ம் ஆண்டிலும், பின்னாலும் பிறந்தவர்கள்) அவசியம் பார்க்க வேண்டியதோர் படம்: கலைப்புலி எஸ். தாணுவின் […]

Loading

செய்திகள்

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: உடனடி முன்பதிவை நிறுத்த ஆலோசனை

திருவனந்தபுரம், டிச. 13– சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து வருவதால் உடனடி முன்பதிவை நிறுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக 90 ஆயிரத்துக்கு மேலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கேரள உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு தரிசன நேரம் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டது. மேலும் தினசரி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து […]

Loading

செய்திகள்

கடல் நீரில் கழிவு எண்ணெய் படலத்தை நீக்க சென்னை பெட்ரோலியம் தீவிர நடவடிக்கை

6 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்கியது சென்னை, டிச. 13– மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தொழிற்சாலை வளாகத்தில் இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் கடும் மழையால் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பூண்டி, புழல் ஏரியிலிருந்து வெள்ள நீர் அதிகளவில் வெளியிட்டதால், ஆலை வளாகத்தில் நீர் மட்டம் உயர்ந்ததது. இதனால் கழிவு எண்ணெய் படலம் வெளியேறி உள்ளது. ஆலை நீரில் மூழ்கி, அத்தியாவசிய பெட்ரோல், டீசல், கியாஸ் உற்பத்தி பாதிக்காமல் இருக்க அதிரடி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வளைகுடா நாடுகளில் பயணம் ; அமெரிக்க கச்சா எண்ணெய் ஆதிக்கத்தை நொறுக்கிய புதின்

ஆர். முத்துக்குமார் கடந்த வாரம் டிசம்பர் 6 ந் தேதி ஒரு நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய ஜனாதிபதி புதின் வளைகுடா நாடுகளின் முக்கிய நகரங்களான அபுதாபிக்கும், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்கும் சென்று அந்நாட்டு தலைவர்களுடன் மனம் திறந்து பேசி விட்டு ஈரான் வான்பகுதி வழியாக மாஸ்கோ திரும்பினார். மறுநாள் ஈரான் அதிபர் ரயிசி மாஸ்கோவில் புதினை சந்தித்து பேசியும் உள்ளார். உக்ரைனில் போர் பதட்டம் துவங்கிய சில வாரங்களில் அமெரிக்காவின் கட்டளையின் பேரில் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை, டிச. 13– சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,600-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரன் கடந்த டிசம்பர் 4ம் தேதி புதிய உச்சத்தை எட்டி ரூ.47,800க்கு விற்பனையானது. இதனையடுத்து கடந்த 9 நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து ஒரு சவரன் மீண்டும் ரூ.46,000-க்கு கீழ் சென்றுள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,700க்கும், சவரனுக்கு […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புகை குண்டு வீச்சு

4 பேர் கைது 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று அது முறியடிக்கப்பட்ட 22வது வருட நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென 2 பேர் கூச்சலிட்டு கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளே குதித்தனர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டுகள் இருந்தது. சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்.இதனால் அவையில் இருந்த […]

Loading

செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐநா பொதுச் சபையில் தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

நியூயார்க், டிச. 13– காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேல் இன்றுவரை கடும் பதிலடி கொடுத்துள்ளது. இதில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் 45 ஆயிரம் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற தாக்குதல் 22ம் ஆண்டு நினைவு தினம்: மோடி, சோனியா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி, டிச. 13– நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22ம் ஆண்டு நினைவு நாளான இன்று அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அனைத்துகட்சி எம்.பி.க்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி லக்ஷர்–ஏ–தொய்பா, ஜெய்ஷ்–ஏ–முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 5 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் டெல்லி போலீசார் 5 பேர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையைச் […]

Loading