செய்திகள்

குஜராத்தில் மது குடிக்க லைசென்ஸ்: 3 ஆண்டில் 58 சதவீதம் உயர்வு

காந்தி நகர், டிச. 29– குஜராத்தில் மருத்துவக் காரணங்களுக்காக மது வாங்க உரிமம் பெற்றுள்ளவா்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகவலை மாநில மதுவிலக்கு மற்றும் கலால் வரித் துறை தெரிவித்துள்ளது. அத்துறை வெளியிட்ட தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:– குஜராத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 27,452 பேர் மது உரிமம் வைத்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 43,470 ஆக அதிகரித்துவிட்டது. மாநில மக்கள்தொகை சுமார் 6.7 கோடியாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது மது […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 797 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 23 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 29– இந்தியாவில் புதிதாக 797 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4091 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 702 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

ரஷ்யா–இந்தியா இடையேயான உறவு வலுவாக உள்ளது: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

மாஸ்கோ, டிச. 28– ரஷ்யா–இந்தியா இடையேயான உறவு வலுவாக உள்ளது என ரஷபுய அதிபர் புதினைச் சந்தித்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள்கள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவர் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் கிரெம்ளினில் சந்தித்து உரையாற்றினார். இந்த சந்திப்பின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உக்ரைன் […]

Loading

செய்திகள்

வடமாநிலங்களில் மூடுபனி எதிரொலி: 30 டெல்லி விமானங்கள் தாமதமாக இயக்கம்

டெல்லி, டிச. 26– டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு ரெயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகளின் சேவை, விமான சேவைகள் தடைப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆரஞ்சு எச்சரிக்கை மேலும், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது என காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு […]

Loading

செய்திகள்

ஐபிஎல்: லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா?

சென்னை, டிச. 26– சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு ஆண்டும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் அணியில் 2 ஆண்டுகள் முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக […]

Loading

செய்திகள்

நெல்லை மாவட்ட மக்களுக்குரூ.6000 நிவாரண நிதி வழங்க டோக்கன் வினியோகம்

நெல்லை, டிச. 26– நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18–ந்தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் சுமார் 7 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கி நின்றது. வெள்ளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால், பொதுமக்கள் அதிக […]

Loading

செய்திகள்

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

டெல்லி, டிச. 26– டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். காலநிலை மாற்றத்தால் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. மேலும் கடுங்குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் காலை எழுந்ததும் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மக்கள் கடும் […]

Loading

செய்திகள்

திருப்பதிக்கு ஜனவரி 1 ந்தேதி வரையில் பக்தர்கள் வரவேண்டாம் : தேவஸ்தானம்

திருப்பதி, டிச. 26– திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் முடிந்ததால், ஜனவரி ஒன்றாம் தேதி வரை டிக்கெட்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியதன் காரணமாகவும், கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாகவும் ஏராளமானோர் திருப்பதிக்கு சென்றுள்ளனர். டோக்கன்கள் முடிந்தது இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் […]

Loading

செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர் திருவிழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு சிதம்பரம், டிச. 26– சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 412 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 7 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 26– இந்தியாவில் புதிதாக 412 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4170 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 628 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading