மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜன.13-– இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர் களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் […]