மக்கள் குரல் பார்வையில்

காமராஜர் இந்திரா காந்தியை பிரதமராகிய தினம்

1966 ஜனவரி 19 ந்தேதி, இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமான முக்கியத்துவம் பெற்ற நாளாக விளங்குகிறது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த காமராஜரின் ஆதரவுடன், நாடாளுமன்றக் கட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையதாகும். காமராஜர், இந்திய அரசியல் வரலாற்றில் “கிங் மேக்கர்” (King Maker) என உலகளவில் அறியப்பட்டார். இந்த வெற்றி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆஸ்திரேலியாவின் தொடக்கம்

ஜனவரி 18, 1788 அன்று ஆஸ்திரேலியாவின் பாட்டனி விரிகுடாவில் (Botany Bay) முதல் கப்பல் படை (First Fleet) வந்தது. இது பிரிட்டிஷ் பேரரசின் காலனித்துவ விரிவாக்கத்தின் மைல்கல். இங்கிலாந்து அனுப்பிய 11 கப்பல்களில் 1,400 க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இந்த நிகழ்வு, குடியேற்றம், ஆட்சி, மனித உரிமை மற்றும் வரலாற்று நீதி குறித்து இன்றும் உலகளவில் விவாதிக்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வு. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் முக்கியம் என்பதைப் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆவி எஞ்சின் ரயில்கள் மெட்ரோ அவதாரமானது!

1863–ம் ஆண்டு ஜனவரி 10 அன்று, லண்டனில் மெட்ரோ பாலிட்டன் ரயில்வே தொடங்கப்பட்டது. இதுவே உலகின் முதல் அடித்தள ரயில் (Underground Railway). நகரங்களின் போக்குவரத்து முறையை முழுமையாக மாற்றிய இந்த முயற்சி, ரயில் பயணத்தின் புதிய யுகத்திற்குத் துவக்கமாக அமைந்தது. ரயில்களின் வரலாறு ஆரம்பத்தில் ஆவி இயந்திரம் (Steam Engine) அடிப்படையிலான இழுவை ரயில்களால் தொடங்கியது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு ஓடிய இந்த ரயில்கள், தொழில்துறை புரட்சிக்காலத்தில் மக்களையும் சரக்குகளையும் வேகமாக நகர்த்த உதவின. காலப்போக்கில் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

மகாத்மா திரும்பினார், சத்யாகிரக வழியில் சுதந்திரம் பெற்றும் தந்தார்

இன்றைய தினம் (ஜனவரி 9) இந்திய வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை நாள். வழக்கறிஞர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாகச் சென்றவர், ஓர் அறப்போராளியாக, மகாத்மாவாக, தாயகம் திரும்பிய நாள் இது. 1915-ஆம் ஆண்டு இதே நாளில், தென்னாபிரிக்காவில் 21 ஆண்டுகளாக வாழ்ந்து போராடிய மகாத்மா காந்தி, மும்பை அப்போலோ பண்டர் துறைமுகம், இன்றைய இந்திய கேட் வே, வழியாக தாய்நாட்டுக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்தார். இதுவே, காந்தியடிகளின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிய தருணமாகும். இந்தத் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

உலகம் சுழல்கிறது: கலிலியோ தந்த தெளிவு

அறிவியல் வரலாற்றில் ஒரு அபூர்வமான ஒற்றுமை கொண்ட நாள். “பூமி நிலையானது அல்ல, அது நகர்கிறது” என்று உலகுக்கு முதன்முதலில் உரக்கச் சொன்ன கலிலியோ கலிலி மறைந்த தினம் இன்று. அதேபோல, அவர் சொன்ன அந்த உண்மையை, “இதோ பாருங்கள் பூமி தன் அச்சில் சுழல்கிறது” என்று ஊசல் பரிசோதனை மூலம் லியோன் ஃபோக்கோ நிரூபித்த நாளும் இன்றுதான். இன்று (ஜனவரி 8) நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்படும் கலிலியோ கலிலி (Galileo Galilei)யின் நினைவு […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

முகலாய சாம்ராஜ்யத்தின் முடிவு

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு, அதாவது முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு, கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபர் மீதான வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை டெல்லி செங்கோட்டையில் இந்நாளில் தொடங்கியது. 82 வயதான பேரரசர் மீது தேசத்துரோகம், சதித்திட்டம் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ரங்கூனுக்கு (பர்மா) நாடு கடத்தப்பட்டார். இந்த […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

அன்னை தெரசாவின் வருகை

1929ஆம் ஆண்டு. இளம் வயதிலேயே துறவறப் பாதையைத் தேர்ந்தெடுத்த ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இளம்பெண், தன் வாழ்க்கையின் மிகப் பெரிய பயணத்தைத் தொடங்கினார். ஐரோப்பாவின் குளிர்ந்த நிலங்களிலிருந்து, வெப்பமும் வறுமையும் கலந்த இந்தியா நோக்கி அவர் வந்த நாள், மனிதநேய வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக மாறியது. அவர்தான் அன்னை தெரசா. தெரசா இந்திய மண்ணில் கொல்கத்தாவில் (1929 ஜனவரி 6 ந்தேதி ) காலடி வைத்த அந்த நாளே இன்று. அவர் வாழ்நாள் முழுவதும் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

இயற்கை பாதுகாப்பில் பறவைகள்

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5 அன்று அனுசரிக்கப்படும் தேசிய பறவைகள் நாள் (National Birds Day), மனித வாழ்வுக்கும் இயற்கைச் சமநிலைக்கும் பறவைகள் அளிக்கும் பங்களிப்பை நினைவூட்டும் நாளாகும். உயிரியல் சங்கிலியின் முக்கியக் அங்கமாக உள்ள பறவைகள், வன சூழலையும் வேளாண் அமைப்பையும் சமநிலைப் படுத்துகின்றன. ஆனால் நகரமயமாக்கல், வனச்சுருக்கம், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் பறவைகளின் வாழ்விடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாயம்–பறவைகள் இணை வாழ்வின் சிறந்த எடுத்துக்காட்டாக சென்னையின் அருகாமையில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

டிஜிட்டல் யுகத்தில் நியூட்டன் உயிர்…

1643 ஜனவரி 4 (ஜூலியன் நாட்காட்டி) அன்று பிறந்த சர் ஐசக் நியூட்டன், நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்த மாபெரும் விஞ்ஞானி. அவரது கண்டுபிடிப்புகள் இல்லையெனில் இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகமே உருவாகியிருக்காது என்றே கூறலாம். மனித அறிவு இயற்கையின் சட்டங்களை புரிந்து கொண்டு உலகை மாற்ற முடியும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் ஐசக் நியூட்டனின் முக்கிய கண்டுபிடிப்புகள், அவை: இயக்க விதிகள் (Three Laws of Motion) – வாகனங்கள், இயந்திரங்கள், ராக்கெட்டுகள், விமானங்கள் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆங்கிலேயரை அலறவிட்ட நாயகர்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வீரப்போர் புரிந்த தமிழகத்தின் இரண்டு பெரும் ஆளுமைகளான ‘வீரமங்கை’ வேலு நாச்சியார் (பிறப்பு: 1730) மற்றும் ‘பாஞ்சாலங்குறிச்சி சிங்கம்’ வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: 1760) ஆகிய இருவரும் பிறந்தது இதே நாளில்தான்! அரசியல் அறிவு, தைரியம், தியாகம் – இவை இருவரின் பொதுப் பண்புகள்) ஆனால் ஆங்கிலேயரை எதிர்கொண்ட விதமும், இவர்களின் போர் முறைகளும் வெவ்வேறானவை.ஒரே எதிரி… […]

Loading