அறிவியல் அறிவோம் கார்பன் வெளியேற்றம் மற்றும் செலவை குறைக்கும் புதிவகை சிமெண்ட்டை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தையும் உற்பத்தி செலவையும் குறைக்கும் புதிய வகை சிமெண்ட் வகையை உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடியின் பேராசிரியர் மனு சந்தானம் தெரிவித்தார். உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் சிமெண்ட் உற்பத்தித் தொழில்களால் மட்டும் கிட்டத்தட்ட 8 விழுக்காடு வெளியேறுகிறது. இதனால் சிமெண்ட் உற்பத்தியால் ஏற்படும் கார்பன் அளவை குறைக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அந்த வகையில், சென்னை ஐஐடி கார்பன் […]