வாழ்வியல்

உழவர்களுக்கான சில தகவல்கள், நிறுவனங்கள்!

1.கன நீர் பிரச்சனைக்கு தீர்வு காண… கிரிஸ்டல் கிளியர் வாட்டர் சொலுசன்ஸ் கொளத்தூர், சென்னை. தொடர்புக்கு 944781692 2.தோப்புகளை உருவாக்க… ஹைடெக் இந்தியா குட்டை கரை மேடு, துறையூர் தாலுகா, திருச்சி மாவட்டம், தொடர்புக்கு 9942517457. 3. பல வகை பயிற்சி மற்றும் அக்ரி கிளினிக் அமைக்க… வாப்ஸ் நிறுவனம் சொக்கி குளம், மதுரை–2 தொடர்புக்கு 9443569401 4.தென்னம்பிள்ளை(கன்று ) வாங்க… தென்னை வளர்ச்சி கழகம், தஞ்சை மாவட்டம், திருவையாறு–613204 தொடர்புக்கு–9894986721 5. நிலத்தடி நீர் பிரச்சனை […]

வாழ்வியல்

வேப்பம் பூவிலுள்ள மருத்துவ குணங்கள்!

தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். பொதுவாக, மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை. பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து, கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும். வேப்பம்பூவை நிழலில் […]

வாழ்வியல்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது பற்றிய வதந்திகள்!–2

ஜோர்டன் சாதர் என்னும் யூ டியூப் வீடியோ தயாரிப்பவர், அற்புத உலோக சத்துகள் (மிராகல் மினரல் சப்லிமெண்ட்) கொரோனா வைரஸை அழிக்கும் என கூறியுள்ளார். இவர் குறிப்பிடும் இந்த அற்புத உலோக சத்து “குளோரின் டை ஆக்ஸைடை” கொண்டது. இது புற்றுநோயை மட்டுமல்லாமல் கொரோனாவையும் அழிக்கும் என டுவீட் செய்திருந்தார். அதேவேளை, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், இதனை குடிப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்தது. பல நாடுகளின் சுகாதார அதிகாரிகளும் இது குறித்து […]

வாழ்வியல்

நலத்துடன் பெண்கள் வாழ சில தகவல்கள்!

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், பெண்களின் நலம், கல்வியறிவு, சமுதாய பங்களிப்பு அனைத்துமே இன்று முக்கியமான அம்சங்களாக இருக்கின்றது. எல்லா செல்வத்தையும் விட, உடல் ஆரோக்கியம் தான் முக்கியமானது. பெண் குழந்தைகள் தாய் வயிற்றில் இருக்கும் கால கட்டத்தில் இருந்து வயது முதிர்வு காலம் வரை, உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் பல் வகையான மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். இந்த மாற்றங்களை சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணும், வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும், உடல் நலனை பாதுகாக்க இன்று […]

வாழ்வியல்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது பற்றிய வதந்திகள்!–1

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஆனால் இதுவரை அதற்குத் தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்து குறித்தும் பாதுகாப்பாக இருப்பதும் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. உண்மையில் அறிவியல் கூறுவது என்ன? பூண்டு முகநூலில் கொரோனாவிலிருந்து தப்பிக்க பூண்டு சாப்பிடுங்கள் என்று பெரிதும் பகிரப்படுகிறது. பூண்டு சாப்பிடுவது நல்லது . அதில் நுண்ணுயிரை எதிர்க்கும் தன்மையுடையது. ஆனால் அதை சாப்பிட்டால் […]

வாழ்வியல்

அவரைக்காயில் உள்ள வியக்கத்தக்க நன்மைகள்!

நாம் நமது வீடுகளில் தினமும் சமைக்கும் போது ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்து சமைப்பது உண்டு. இதில் அவரைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். மலசிக்கல்இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல். இது ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிமானம் செய்வது பிரச்சினை ஏற்படும்போது, மலச்சிக்கல் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். உடல் எடைஇன்றைய இளம் […]

வாழ்வியல்

இளமைத் துடிப்பு, உடல் நலத்துடன் இருக்கவேண்டுமா?

உடல் நலத்துடனும் இளமையாகவும் இருக்க செய்ய வேண்டியது என்ன? 1.உணவு நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். உணவு ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்க வேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயா பீன்ஸ், பருப்பு வகைகள் தயிர் போன்றவை இருக்க வேண்டும். 2.உடற்பயிற்சி வீட்டில் இருந்தபடியே செய்ய முடிந்த சிறுசிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முதல் இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்ய தயக்கமாக இருக்கும். மூன்று நாட்களைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் […]

வாழ்வியல்

கடலிலிருந்து தரைக்கு வந்துள்ள ஆக்டோபஸ்!

ஆஸ்திரேலியாவில் கடலிலிருந்து வெளியேறி தரைக்கு வந்த ஆக்டோபஸ் ஒன்றை, ஆஸ்திரேலிய இளைஞர் படம்பிடித்துள்ளார். தண்ணீரை விட்டு தரையில் உலாவும் ஆக்டோபஸ் ஒன்றை, தனது செல்போன் மூலம் நெருக்கமாகப் படம் பிடித்துள்ளார் இளைஞர் ஒருவர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேன்லி கடற்கரைப் பகுதியில், சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், பாறைகளுக்கு நடுவே இருந்த கடல் நீரில் ஆக்டோபஸ் ஒன்றினைக் கண்டார். தனது செல்போன் மூலம் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருந்த போது, ஆக்டோபசும் தன் பங்கிற்கு தரையில் […]

வாழ்வியல்

பப்பாளியில் உள்ள மருத்துவப் பயன்கள்!

பப்பாளி வயிற்றுப் புழுக்கொல்லுதல், தாய்பால் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல், மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்குவது. சிறுநீர்ப்பெருக்குவது கொழுப்பைக் கரைத்து உடலை இளைக்க வைப்பது. பயன்படுத்தும் முறைகள் பப்பாளிக்காயைச் சமைத்து, வாரம் மூன்று நாள் உண்டு வரத் தடித்த உடம்பு குறையும். பழம், நாளும் ஒரு துண்டு சாப்பிடலாம். தாய்ப் பால் பெருகும், மாத விலக்கில் தடை இருந்தால் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நீங்கும். ஓரிரு மாதக்கருவும் கலையும். விதையைத் தூள் செய்து, 5 கிராம் வெல்லத்தில் சாப்பிடக் […]

செய்திகள் வாழ்வியல்

காரைக்குடி வைரவன்பட்டி வைரவ சாமி கோவில்

நாட்டுக்கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் சமுதாயத்தினர் வாணிபத்தில் சிறந்து விளங்குபவர்கள். அநேகர் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் அந்தக் காலங்களில் இருந்தே வாணிபம் செய்தும் இந்து சமயத்தில் அதிக ஈடுபாட்டுடனும் நடந்து வருகின்றனர். அனைத்து துறையிலும் பரிமளிக்கும் இவர்கள் அநேக கோவில்களையும் நிர்மாணித்துப் பராமரித்து வருகின்றனர். அந்தக் கோவில்களில் ஒன்றான வைரவன் சுவாமி திருக்கோவில் பற்றி இன்று அறிவோம். இது காரைக்குடி அருகே வைரவன்பட்டி என்ற ஊரில் உள்ளது. திருப்பத்தூரில் இருந்து 8 கிலோ […]