பெரும்பாலான வீடுகளில் எலெக்ட்ரானிக் ரத்த அழுத்தமானிகளை வைத்துத் தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்கிறார்கள். இதன் முடிவுகள் பல நேரங்களில் தவறாக வந்து, நோயாளிகளைப் பயமுறுத்திவிடுகிறது. ரத்த அழுத்தமானியைப் பொறுத்தவரை மருத்துவர்கள் பரிசோதிக்கும் மெர்க்குரி ரத்த அழுத்தமானியில் பரிசோதிப்பதுதான் சரியான முடிவைத் தரும். Old is gold! நீங்கள் ஒருமுறை குடும்ப மருத்துவரிடம் உங்கள் ரத்த அழுத்தத்தை அளந்துகொள்ளுங்கள். அப்போது கூட சட்டை அல்லது ரவிக்கையின் மீது துணிப்பையைக் கட்டக் கூடாது. கால்களைக் குறுக்காகப் போட்டுக்கொள்ளக் கூடாது. […]