வாழ்வியல்

பெரிய அளவில் முந்திரி தொழிற்சாலை தொடங்க நல்ல எதிர்காலம்

இந்தியாவில் ஆந்திரா, கோவா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒரிசா, மகாராஷ்ட்ரா, குஜராத், ஆகிய 8 மாநிலங்களில் முந்திரி விளைகிறது. வெளிநாட்டிலிருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. அதை வறுத்து, உடைத்து, தரம் பிரித்து விற்க பல்லாயிரம் பெரிய பேக்டரிகள் வந்து விட்டன. மூன்றில் இரண்டு பங்கு கேரளாவிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ளன. வியட்நாம் / ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி ஆவதால், துறைமுக நகருக்கு அருகில் ஆயில் இதில் கிடைக்கிறது. முதல் தர பருப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறைந்த கூலியில் […]

வாழ்வியல்

பாட்டி வைத்திய முறையில் எளிய மருத்துவ முறைகள்!

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். * விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். * கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். * சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் […]

செய்திகள் வாழ்வியல்

வங்கக் கடலில் 5 கி.மீ. தூரத்தை 2 மணியில் நீந்தித் திரும்பிய 5 வயது லோகிதா!

அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே … உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்… அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே என்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை சற்று மாற்றிப் பாட வேண்டும் போல் இருக்கிறது 5 வயது பிஞ்சு மழலை சிறுமி யோகிதா சராக்ஷியை கண்ணெதிரில் பார்க்கிறபோது. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… பொங்கி வீசும் கடலலையில் எதிர் நீச்சல் அடித்து கரை திரும்பும் வரை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… என்று நிரூபித்திருக்கும் அவளின் சாதனையை பார்த்தபோது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என்ற […]

வாழ்வியல்

இந்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் வழங்கும் கல்வி உதவித் தொகை

இந்திய அரசின் சிறுபான்மை நலத்துறை பல கல்வி உதவித் தொகை திட்டங்களை அறிவித்துள்ளது. பல கோடி சிறுபான்மை மாணவர்கள் இதைப் பெற்று வருகின்றனர். கட்டுரைப் போட்டி, உயிர்நிலைப் பள்ளி மாணவர்கள், மேற்படிப்பு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு பரிசு என பல நல்ல செயல்களை செய்வதுடன் (ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினருக்கு) பல உதவிகள் செய்து வருகிறது. * டாக்டர் அம்பேத்கர் இண்டர்நேஷனல் சென்டர் என்ற பெயரில் ஒரு மையம் தொடங்கப்பட உள்ளது. * […]

வாழ்வியல்

தக்காளிக்கு சுவையை தரும் ‘டாம்லாக்சி’ என்ற மரபணு!

இன்று கடைகளில் கிடைக்கும் தக்காளிகள், ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டவை. அவை பெட்டிக்குள்ளும், கடையிலும் நெடுநாட்கள் கெடாமல், நிறம் மாறாமல் இருக்கும்படி மரபணுத் திருத்தம் செய்யப்பட்டவை. வர்த்தக ரீதியில் வளர்க்கப்படும் தக்காளி வகைகளில் சதைப் பற்று, புளிப்பும் இனிப்பும் கலந்த ருசி, மணம் போன்றவற்றைத் தரும் ஜீன்கள் அகற்றப்பட்டு விட்டன. இதனால் தான், அந்தக் காலத்து ருசி மிக்க தக்காளி விதைகளை, ஆர்வலர்கள் பலர் தங்கள் தேவைக்கு வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அண்மையில், மரபணு ஆராய்ச்சியாளர்களில் சிலர், தக்காளிக்கு […]

வாழ்வியல்

மருத்துவ குணம் கொண்ட சித்தரத்தையின் பயன்கள்!

சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் விலகிவிடும். ஆஸ்துமா குணப்படுத்த : சிலர், இரைப்பு இருமல் […]

வாழ்வியல்

கோவைக் காயில் உள்ள எண்ணற்ற மருத்துவம்!

கோவைக்காயின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கோவைக்காய் இலை, இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும். கோவைக்காய் வேர், குஷ்டம், பிரமேகம், வாத நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகும். கோவைக்காயில், சாம்பார், கூட்டு போன்றவை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும். கோவைக்காய் இலைச் சாறு 20மிலி உடன் சம […]

வாழ்வியல்

அதிக ஆயுளை பெறுவதற்கு குளோனிங் செய்யும் மரங்கள்!

கிழக்கு கலிபோர்னியாவில் உள்ள பிரிஸ்டல்கோன் (bristlecone) பைன் மரம் தான், அதிக வயதான, வாழும் நிலையில் உள்ள தனிப்பட்ட மரமாகக் கருதப்படுகிறது. 2012ம் ஆண்டு கணக்கிட்டபடி அந்த மரத்துக்கு 5,062 வயது என கூறப்பட்டது. ஆனால் இன்னும் அதிகமான ஆயுளைப் பெறுவதற்கு, புத்திசாலித்தனமான மரங்கள் தங்களுக்கான புதிய வழிமுறையாக, குளோனிங் செய்து கொள்கின்றன. ஆம், அந்த மரங்கள் தங்களுக்குள்ளாக குளோனிங் செய்து கொண்டு, அதே வேர் முறைகளின் மூலம் இணைக்கப்பட்ட மரபணு ரீதியாக ஒரே மாதிரியான குளோனிங் […]

வாழ்வியல்

தூத்துக்குடி ஷிப்பிங் & பார்வேர்டிங் ஏஜெண்டுகள் பற்றிய பட்டியல்!

தூத்துக்குடி ஸ்பிக் விவசாய பவுண்டேஷன் அமைப்பில், ஒரு புறம் மணலும், மரங்களும், எல்பிஜி கேஸும், நிலக்கரியும், ஸ்டெர்லைட்களு்ககு தாமிரம், இயந்திரங்களும், உரமும் வந்து இறங்குகிறது. இங்கிருந்து கண்டைனர்கள் ஆயிரக் கணக்கில் இரவும் பகலும் ஏற்றுகின்றனர். இது அருமையான இயற்கை துறைமுகம். இதை மேம்படுத்தி, மதுரை – தூத்துக்குடி ( வழி அருப்புக்கோட்டை) ரெயில் லைன் போட்டு, 6 வழிச்சாலை உருவாக்கி 1) தூத்துக்குடி -– மாலத்தீவு (2) தூதுக்குடி – கொழும்பு (3) தூத்துக்குடி –- சிங்கப்பூர் […]

வாழ்வியல்

உயிர் கற்களைக் கொண்ட தென்னாப்பிரிக்க தாவரம்!

கற்குமிழிகள் `உயிர் கற்கள்’ என்று கருதப் படுகின்றன. அவை உயிர் வாழும் இனமாக இருப்பதைக் காட்டிலும், கூழாங்கற்களைப் போல தோற்றமளிக்கும். ஆனால், தெற்கு ஆப்பிரிகாவைச் சேர்ந்த நம்ப முடியாத இந்த உயிரினம், உண்மையிலேயே அங்கீகரிக்கப்படாத தாவர இனமாக உள்ளது. அதிக செம்மையான தாவரங்களை உருவாக்குவதில், இது முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது. மிக மோசமான வறட்சி சூழ்நிலைகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் உயிர்வாழும் தன்மை கொண்டதாக இந்தத் தாவரங்கள் உள்ளன. கற்களைப் போன்ற தோற்றத்தால், பிற […]