வாழ்வியல்

தலைமுடி உடையக் காரணம்….

கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசி, சூடுபடுத்தி, ரசாயன சிகிச்சை செய்தால் முடிகள் உடையும்; நீரிழிவு நோய் வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூந்தலுக்கு ரசாயனச் சிகிச்சை மேற்கொள்வது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசுவது, கூந்தலை சூடுபடுத்துவது போன்ற செயல்களும் முடிகள் உடைவதற்கு வழிவகுக்கும். முடி உதிர்வுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. சிலருக்கு கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கும். அத்தகைய பாதிப்பு நேர்ந்தால் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது […]

வாழ்வியல்

‘ஹேர் டை’ பூசினால், கூந்தல் பொலிவிழந்து விடும் அபாயம்

தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும். கூந்தலின் தோற்றப் பொலிவு, அதன் மிருதுத் தன்மை, அடர்த்தி போன்றவற்றை கொண்டே உடல் ஆரோக்கியத்தையும் மதிப்பீடு செய்து விடலாம். கண்ணாடி முன்பு சில நிமிடங்கள் நின்று தலைமுடியை பரிசோதித்தாலே சிலவிதமான நோய்பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். தலைமுடிக்கு ‘ஹேர் டை’ பூசினாலோ, குளோரின் கலந்த நீரில் நீச்சல் அடித்தாலோ […]

வாழ்வியல்

நான்கு கால்கள் கொண்ட அதிசய திமிங்கலத்தின் 50 எலும்புகள் கண்டுபிடிப்பு

நான்கு கால்கள் கொண்ட அதிசய உயிரினமான திமிங்கலத்தின் 50 எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரிபார்வேனேட்டர் மில்னேரேவுக்கு முதலைகளைப் போன்ற 1 மீ நீளமான மண்டை ஓடு இருப்பதாக கருதப்படுகிறது இதில் செராடோசூப்ஸ் இன்ஃபெரோடியோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள முதலாவது மாதிரி, “கொம்பு முதலை முகம் கொண்ட நரக ஹெரான்” என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. புருவப் பகுதியைச் சுற்றி குட்டையான கொம்புகள் மற்றும் புடைப்புகள் இருப்பதால் ஹெரான் போன்ற வேட்டை பாணியை இது கொண்டிருக்கலாம் எனக் கருதி இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. […]

வாழ்வியல்

இதய நோய் வராமல் தடுக்கும் செம்பருத்திப் பூ

செம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் சத்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமுடி கறுப்பாகவும் நீண்டும் வளர காலங் காலமாக செம்பருத்தி இலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. செம்பருத்தி பூ இதய நோய் வராமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ; காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் […]

வாழ்வியல்

டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என கண்டுபிடிப்பு

டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல வருட காலப்பகுதியில் இந்த எலும்புகள் ஐல் அவ் வைட், பிரிக்ஸ்டோன் அருகே உள்ள கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன. செளத்தாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவர் கிறிஸ் பார்கர், “பாரியோனிக்ஸில் கண்டறியப்பட்ட டைனோசர் எச்சங்களுடன் தற்போதைய டோனோசர் எச்சங்கள் வேறுபடுகின்றன. இதை பார்க்கும்போது நாம் நினைத்ததை விட பல வகை ஸ்பினோசாரிட் டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார். மூன்று […]

வாழ்வியல்

பொடுகு வரக் காரணம்

வறண்ட சருமம் ; தோல் அழற்சி; தலையில் அரிப்பு போன்ற காரணங்களால் பொடுகுத் தொல்லை தோன்றும். மன அழுத்தம்; நோய் எதிர்ப்பு சக்தி குறைவு; நரம்பியல் கோளாறு போன்றவைகளாலும் பொடுகு ஏற்படும். தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரக்கூடும். சரும அழற்சி ஏற்பட்டிருந்தால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது, திட்டுக்கள் தோன்றுவது, மஞ்சள் நிறத்தில் செதில்கள் […]

வாழ்வியல்

மஞ்சள் காமாலை நோயைக் குணமாக்கும் கரிசலாங்கண்ணிக் கீரை

மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும்; பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி சாறு 100 […]

வாழ்வியல்

ஜூம் ஃபோன் வசதி இந்தியாவுக்கு எப்போது வரும்?

இணைய சந்திப்புகள், கூட்டங்களுக்கு உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Zoom செயலியின் பயன்பாடு இந்த பெருந்தொற்றுக் காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஜூம் செயலியின் எதிர்காலம், அந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள், Zoomல் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பது, இந்தியாவில் அந்நிறுவனத்தின் விரிவாக்கம் ஆகியவை குறித்து அந்நிறுவனத்தில் பிராடக்ட் & இன்ஜினியரிங் பிரிவின் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். ஜூம் பிராடக்ட் நிறுவன இன்ஜினியரிங் பிரிவு தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம் பிபிசி […]

வாழ்வியல்

இடுப்பு வலி குணமாக என்ன செய்ய வேண்டும்?

இக்கால சூழலில் இடுப்பு வலி என்பது அனைத்து வயதினருக்கு வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் வயதானவர்களுக்கு மட்டுமே இடுப்பு வலி இருந்தது. ஆனால் இன்றோ நமது வாழ்க்கை நிலை மாறியதால் 20 வயது இளைஞர்களுக்கு கூட இடுப்பு வலி வருகிறது. இடுப்பு வலி வர பல காரணங்கள் உண்டு. ஒரே இடத்தில அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் இடுப்பு வலி வரலாம். வாகனத்தில் தினமும் வெகு தூரம் செல்வதால் இடுப்பு வலி வரலாம். முதுகு தண்டுவடம் […]

வாழ்வியல்

கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி

இஞ்சி கூந்தலுக்கு மென்மையும் மிருதுவான தன்மையும் கொடுக்கும். உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை பயன்படுத்தி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். பொடுகு பிரச்சினைதான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தலையில் ஏற்படும் சருமம் சார்ந்த பிரச்சினைதான் பொடுகு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாற்றை தலையில் தடவும்போது நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். தூங்கச் செல்வதற்கு முன்பு இஞ்சி […]