சினிமா

வறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய ‘ராபின்ஹுட்’ நடிகர் மொட்டை ராஜேந்திரன்!

இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். லூமியெர்ஸ் ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ” ராபின்ஹூட் ” இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், […]

சினிமா

நெசவாளர்கள் பிரச்சினையை மையப்படுத்தி சமுத்திரக்கனி நடிப்பில் சங்கத் தலைவன்!

நெசவாளர்கள் பிரச்சனையை மையமாக்கி உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வெற்றிமாறன் உருவாக்கியிருக்கும் படத்தின் விழாவில் சுப்பிரமணிய சிவா, ஜி.வி.பிரகாஷ், பவன், பாரதிநாதன் உள்ளிட்ட கலையுலக பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள். உதயம் nh4 எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கிய மணிமாறன் இப்படத்தின் இயக்குனர். சமுத்திரக்கனி, வி.டி. ரம்யா முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கருணாஸ், சுனுலக்ஷ்மி சிறப்புத் தோற்றம். தறியுடன் என்னும் தலைப்பில் பாரதிநாதன் எழுதிய நாவலை […]

சினிமா செய்திகள்

அந்த நாள் ‘சூப்பர் ஸ்டார்’ எம் கே தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்த நாள்– இன்று

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் என்பதன் சுருக்கமே– எம். கே. தியாகராஜ பாகவதர். 01-03-1910 –ல் பிறந்தவர். தகப்பனார் பெயர்: கிருஷ்ணமூர்த்தி, தாயார் பெயர்: மாணிக்கத்தம்மாள். விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்தவர் கர்நாடக இசையை முறைப்படி கற்றவர். 1926–ல் திருச்சிராப்பள்ளி மொன்மலையில் பவளக்கொடி என்ற நாடகத்தில் அர்ஜூனன் வேடத்தில் நடித்தார். இந்த நாடகம் 1934–ல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அந்த படத்தில் பாகவதர் நடித்தார். இதில் இடம்பெற்ற 55 பாடல்களில் பாகவதர். 22 பாடல்களைப் பாடினார். அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் […]

சினிமா

கிரிக்கெட் வீரனாவதே என் கனவு; மணிரத்னம் கவிஞனாக்கினார்: ‘வானம் கொட்டட்டும்’ சிவானந்த்

‘‘கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது கனவாக இருந்தது.. ஆனால் டைரக்டர் மணிரத்னம் மூலம் மூலம் பாடலாசிரியர் ஆகிட்டேன்’’ என்று “வானம் கொட்டட்டும்” பாடலாசிரியர் சிவானந்த் பெருமிதத்தோடு கூறினார். இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், தனா இயக்க, சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சாந்தனு, பாடகர் ஸ்ரீராம் மற்றும் பலர் நடிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பாடல்களை சிவானந்த் எழுதியுள்ளார். அப்படத்தின் பாடல்கள் எழுதிய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். “‘வானம் […]

சினிமா

“வயதாகி விட்டது என்று சுருண்டு விடாதே…!’’ எஸ்.பி.முத்துராமனுக்கு புத்தி சொன்ன ‘ஞானச்செருக்கு’!

“ஞானச்செருக்கு என்கிற இந்தப் படம் படைப்பாளர்களின் செருக்கு என்றுதான் சொல்வேன். இந்த செருக்கு எல்லாம் எங்களுக்கு இருந்தது இல்லை. ஆனால் இந்த பையன்களுக்கு (டைரக்டர் தரணி ராஜேந்திரன், தயாரிப்பாளர் செல்வராம், வெங்கடேஷ்) இருக்கிறது. இந்த படத்தின் கதைநாயகன் அதாவது வீர சந்தானம் நடித்துள்ள கதாபாத்திரம் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்து வெற்றி பெற்று பின்னர் ஓய்வு பெற்றவர். ஓய்வுபெற்ற பின்பும் நான் சும்மா இருக்க வேண்டுமா என நினைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என லட்சியத்துடன் புறப்பட்டு தனது […]

சினிமா

‘‘தமிழகத்து அமிதாப்பச்சன்… சத்யராஜ்! – டைரக்டர் பி.வாசு

‘என்னைப் பொறுத்தவரை தமிழகத்து அமிதாப்பச்சன் சத்யராஜ் தான்…’ என்று பிரபல டைரக்டர் பி.வாசு பெருமிதத்தோடு கூறினார். தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 புரோடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குனர் யு.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற […]

சினிமா செய்திகள்

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை காஜோலுக்கு மெழுகு சிலை!

மும்பை, பிப்.5– சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் பிரபல இந்தி நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை இன்று திறக்கப்படுகிறது. இவரே திறந்து வைக்கிறார். சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் பல்வேறு நாட்டிலிருந்து வரும் மக்களை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா சுற்றுலாத்தலம். அந்த அருங்காட்சியகத்தில் பல துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன. மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், […]

சினிமா

‘பட்டாஸ்’சை அடுத்து மீண்டும் சத்யஜோதி தயாரிப்பில் தனுஷ்!

சென்னை, பிப்.4– தனுஷ் மீண்டும் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் “தனுஷ் 43”. டி.ஜி. தியாகராஜனின் – சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் தியாகராஜன். இந்தப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் தனுசுடனும், […]

சினிமா

லண்டன் பரபரப்பு பகுதியில் ‘சண்டைக்காரி’: ஸ்கேனர் சுழலும் ஒளி விளக்குகளுடன் அரங்கு

சென்னை, பிப்.4– “ சண்டக்காரி ” – ஆர். மாதேஷ் இயக்கத்தில் விமல் – ஸ்ரேயா நடிக்கும் படத்திற்காக பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. காட்சிப்படுத்த தேவையான லேட்டஸ்ட் ஸ்கேனர் சுழலும் ஒளி விளக்குகள் அனைத்தும் வரவழைக்கப்பட்டு அரங்கு முழுவதும் பொருத்தப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்த அந்த அரங்கினை படபிடிப்பிற்கு வந்திருந்த அனைவரும் பார்த்து வியந்து பாராட்டினர். அங்கு, 200 துணை நடிகர்கள் பங்கேற்க, 100 நடன கலைஞர்களுடன், விமல், ஸ்ரேயா, சத்யன், புன்னகை பூ கீதா, என […]

சினிமா

‘பிரண்ட்ஷிப்’ சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் – ஹீரோ!

சென்னை, பிப்.4– ஷேண்டோ ஸ்டுடியோஸ் அண்ட் சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர். – ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் “பிரண்ட்ஷிப்’’. இதில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். “பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது என்றார் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமத்.