செய்திகள் வர்த்தகம்

‘கொரோனா’ சிகிச்சையில்’விராபின்’ மருந்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி

புதுடெல்லி, ஏப். 24– மிதமான கொரோனா பாதிப்புக்கு, ‘சைடஸ் கெடிலா’ நிறுவனத்தின், ‘விராபின்’ வைரஸ் எதிர்ப்பு மருந்து பயன்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தீவிர கொரோனா பாதிப்புக்கு பயன்படும், ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கெடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் படேல் கூறியதாவது:– ‘‘எங்கள் தாய் நிறுவனமான, சைடஸ் கெடிலா, கொரோனா சிகிச்சைக்கு, ‘விராபின்’ என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதை, கொரோனா அறிகுறி தோன்றிய உடன் பயன்படுத்தினால், வைரஸ் […]

செய்திகள் வர்த்தகம்

சென்னையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.208 உயர்வு

சென்னை, ஏப். 22– தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 208 உயர்ந்து, ரூ.36,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்றும் ஒரே […]

செய்திகள் வர்த்தகம்

சவரனுக்கு இன்று ரூ.472 உயர்வு; மீண்டும் ரூ.36 ஆயிரத்தை கடந்தது

சென்னை, ஏப். 21– சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 அதிகரித்து மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் தங்கம் விலை சற்று குறைந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் அதிரடியாக ஏற்றத்தை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் சவரன் ரூ. 35,960 க்கு விற்பனை ஆனது, நேற்று திடீரென சவரனுக்கு ரூ. 384 குறைந்து ரூ.35,576 க்கு விற்பனை ஆனது. […]

செய்திகள் வர்த்தகம்

கொரோனா எதிரொலி: சரிவில் துவங்கிய மும்பை பங்கு சந்தை

மும்பை, ஏப்.12– கொரோனா எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1470 புள்ளிகள் சரிந்து 48,120 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்றுக்கு 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்துள்ளது. 12.01 […]

செய்திகள் வர்த்தகம்

அதானி குழுமத்துடன் பிளிப்கார்ட் ஒப்பந்தம்

சென்னை, ஏப். 12– இந்தியாவில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் விளங்கி வருகின்றன. இந்நிலையில் அமேசான் இந்தியா, முழுவதும் சரக்கு கிடங்குகள், தனிப்பட்ட போக்குவரத்து டெலிவரி சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் ப்ளிப்கார்ட் கூரியர், இ காமர்ஸ் நிறுவனங்களுடனான பங்கீட்டின் பெயரில் டெலிவரி சேவையை தொடர்ந்து வந்தன. பிளிப்கார்ட்–அதானி ஒப்பந்தம் இந்நிலையில்தான் தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனம் […]

செய்திகள் வர்த்தகம்

ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.50 தள்ளுபடி: ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் அறிவிப்பு

சென்னை, ஏப்.9– ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.50 தள்ளுபடி மற்றும் வெள்ளி பொருட்களின் செய்கூலியில் 25% குறைவாகப் பெறலாம் என ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று 1964ஆம் ஆண்டில் இருந்து பிரதானமாக விளங்கும் நிறுவனம் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ். இன்று உலகமெங்கும் 50 ஷோரூம்களாக வானளவு உயர்ந்து நிற்கிறது. மேலும் 50 ஆண்டுகள் கடந்தும் புத்தம் புது டிசைன்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ராசிக் கற்கள் உள்ளிட்ட அனைத்து வித […]

செய்திகள் வர்த்தகம்

சர்வதேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா: உலக வங்கி பாராட்டு

வாஷிங்டன், ஏப்.9– சர்வதேச அளவிலான வளர்ச்சி அதிகரிக்க, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், முக்கிய காரணிகளாக உள்ளன என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத் தொடரின் துவக்க நிகழ்ச்சியில், உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சில நாடுகளில், கொரோனா தடுப்பூசி கிடைப்பதிலும், மக்களின் வருவாயிலும் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சில நாடுகளில், இந்த வருவாய் […]

செய்திகள் வர்த்தகம்

சென்னையில் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

சென்னை, ஏப்.9– சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்த்தப்பட்டு, 35,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொரோனா காரணமாக தொழில்துறை கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால் பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பினார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்க விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதனால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தது. […]

செய்திகள் வர்த்தகம்

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல்: ரூ.1.24 லட்சம் கோடியானது

டெல்லி, ஏப். 3– ஜிஎஸ்டி மூலம் கடந்த மார்ச் மாத வசூல் ரூ.1.24 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, இந்தியா முழுவதும் 2017 ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளை விட 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் வெகுவாகக் குறைந்தது. தளர்வுகள் அறிவித்தபின் ஜிஎஸ்டி […]

செய்திகள் வர்த்தகம்

மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு

சென்னை, ஏப். 2– தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ. 34,136 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரத் தொடங்கியது. ஒரு பவுன் […]