செய்திகள்

மெரினாவில் போராட்டம் நடத்திய எச்.ராஜா மீது போலீசார் வழக்கு

Spread the love

சென்னை,ஜன.2–

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய பேசிய நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், போராட்டம் நடத்திய எச்.ராஜா, உள்ளிட்ட 311 பா.ஜ.க.வினர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *