செய்திகள்

மாநகராட்சி பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி கையேடு

Spread the love

சென்னை, பிப். 27–

சென்னைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி கையேடு கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சியும், சென்னை ரோட்டரி கிளப் (கிழக்கு) ஆகியவை இணைந்து நடத்திய “வாழ்க்கை வழிகாட்டி” என்ற நிகழ்ச்சியானது, கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 2019–2020 கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு “வாழ்க்கை வழிகாட்டுதல்” பற்றிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட அறிவியல், கலைப்பிரிவு மற்றும் வணிகவியல் சார்ந்த மாணவ–மாணவியர்கள் பங்கு பெற்றனர்.

மேலும், மாணவ–மாணவியர்கள் 12ம் வகுப்பிற்குப் பிறகு எந்த உயர் கல்வியை தேர்ந்தெடுப்பது, அதன் வாயிலாக எப்படி வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்வது என்ற ஆழ்ந்த சிந்தனைகளோடு இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்தியக் கல்வி அறிவுத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டு பல்வேறு வாழ்க்கை வழிகாட்டி தொகுப்புகள் அடங்கிய “வாழ்க்கை வழிகாட்டி கையேட்டினை” கமிஷனர் இந்நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கல்வி அலுவலர் பாரதிதாசன் மற்றும் உதவி கல்வி அலுவலர்கள், ரோட்டரி கிளப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *