வாழ்வியல்

கால்நடைகளில் காரீய நச்சேற்றம்!

Spread the love

இன்று உலகளவில் தாது நச்சுக்களில் காரீயம் முக்கியமான கேடுவிளைவிக்கும் ஒரு பல் முறை நச்சாகும். காரீய நச்சேற்றம் கால்நடைகள் செல்லப் பிராணிகள் மற்றும் பல வன விலங்குகளில் அதிகமாக கண்டறியப்படும் ஒரு நச்சாகும். காரீயம் சிறிய அளவில் மண் நீர் மற்றும் உணவுகளில் காணப்படுகிறது. இவ்வாறு இயற்கையாக இருப்பதினாலும் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்துவதாலும் மற்ற நச்சு தாதுக்களை விட காரீயம் அதிக அளவில் எங்கும் பரவியிருக்கிறது.

கால்நடைகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் காரீய நச்செற்றத்தால் பாதிப்படைகின்றனர். இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நச்சேற்ற வழிகள்

காரீயம் உள்ள உபயோகப்படுத்திய பேட்டரி செல்களை தவறுதலாக கால்நடைகள் உள்ள கொட்டகையில் இடம்பெறும் போது அவற்றை கால்நடைகள் உட்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. காரீயம் உள்ள வண்ணங்களை கால்நடை கொட்டகையில் பூசும் போது, அந்த சுவற்றை கால்நடைகள் நக்குதல் அல்லது உரிந்து விழும் பழைய சுவர் வண்ணங்களை உட்கொள்ளுதலால் காரீய நச்சேற்றல் உண்டாகும்.

கால்நடைத் தீவனங்கள், பயிர்கள், தண்ணீர், மண் போன்றவை, இரும்பு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் காரீய துகள்களால் மாசு படுகின்றது. அவற்றை கால் நடைகள் உட்கொள்ளும் போது, காரீய நச்சேற்றம் எற்பட வாய்ப்புள்ளது. தவறுதலாக, மோட்டார் எண்ணை அல்லது கிரீஸை உட்கொள்ளுவதாலும் காரீயம் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போதும் காரீய நச்சேற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளது.

கால்நடைகள் பழைய காரீய குழய்களிலிருந்தோ அல்லது காலாய் பூசய பாத்திரங்களிலிருந்தோ தண்ணீரை உட்கொள்ளும் போது, நச்சேற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே ஒவ்வொரு உழவரும் கவனமாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *