செய்திகள்

கார் – டிரக் மோதல்: 13 பேர் பலி

கலிபோர்னியா எல்சென்ட்ரோ நகர் அருகில்

கார் – டிரக் மோதல்: 13 பேர் பலி

ஒரே காரில் ஆட்டு மந்தை கணக்காய் ஏறிப் பயணம் செய்தபோது விபரீதம்

கலிபோர்னியா, மார்ச். 3–

நெஞ்சை உலுக்கும் இந்த பயங்கர விபத்து கலிபோர்னியா மாகாணம் எல்செட்ரோ நகர் அருகில் நடந்தது. ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது, காரின் மீது டிரக் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா -மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று காலை 25 பேருக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கார் மீது டிரக் ஒன்று மோதியது. இதில் 13 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார் ட்டிரைவர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிகிச்சையின் போது ஒருவர் உயிர் இழந்தார். காரில் 28 பேர் பயணம் செய்ததாகவும், அதில் 15 பேர் இறந்ததாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இறந்தவர்கள் 20 வயதிலிருந்து 55 வயதுக்குட்பட்டவர்கள். ஒருவர் 16 வயதுக்குட்பட்டவர்.

கார் அப்பளம் போல் நெறுங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *