வர்த்தகம்

கிராமப்புற படித்த பெண்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் ‘கேப்ஜெமினி’

கிராமப்புற படித்த பெண்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் ‘கேப்ஜெமினி’

ஒரே மாதத்தில் 500 பெண்களுக்கு வேலை திட்டம்

சென்னை, நவ. 29–

பொருளாதாரத்தில் நலிவுற்ற கல்வியறிவு பெற்ற கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்து பணி வழங்கும் முயற்சியில் ‘கேப்ஜெமினி’ நிறுவனம் சகி திரிஷ்டிகான் திட்டத்தை தொடங்கியது. நகர்ப்புற பெண்களுக்கு இணையான வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாத கல்வியறிவுள்ள கிராமப்புற பெண்களின் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தொழில்நுட்பப் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது முதுகலையில் புதிதாக தேர்ச்சி பெற்ற அல்லது குறைந்த வருட அனுபவமுள்ள கிராமப்புற பெண்களுக்கு சகி திரிஷ்டிகான் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் டிசம்பர் 2020 –க்குள் 500 பெண்களை பணியமர்த்தும் குறிக்கோளை கேப்ஜெமினி கொண்டுள்ளது. இது, இந்தியா முழுமைக்குமான ஒரு திட்டம் ஆகும். இந்தியாவிலுள்ள இதர வணிக அமைப்புக்களுக்கும் காலப்போக்கில் இது விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 2021– ஆம் ஆண்டு 15% ஊழியர்களை பணியமர்த்த கேப்ஜெமினியின் வணிக பிரிவு திட்டமிட்டுள்ளது.

கேப்ஜெமினியால் பட்டியிலிடப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவன கூட்டுடன் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதிலிருந்து சகி திரிஷ்டிகான் திட்டச்சுற்று தொடங்குகிறது.கேப்ஜெமினியின் டிஜிட்டல் அகாடமியின் 4 வார அடிப்படை பயிற்சி, மற்றும் கிளவுட், உள்கட்டமைப்பு சேவைகள் 12 வார தொழில்நுட்பப் பயிற்சி உடனடி வேலை வாய்ப்பை பெற்று தரும்.

இந்த தொழில்நுட்ப பயிற்சி, மென்திறன் கல்வி, மற்றும் பணிபயிற்சி ஆகியவை பொறியாளர்களாக அவர்களை மாற்றுவதற்கு உதவும். பயிற்சிக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டவர்கள் கேப்ஜெமினியின் குழுவினால் பணியமர்த்தப்படுவர்.

இந்தியாவில் கேப்ஜெமினி 12 இடங்களில் 1.25 லட்சம் உறுப்பினர்களை கொண்டு இயங்கிவருகிறது: தமிழ்நாட்டில் சென்னை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அலுவலகம் உள்ளது. www.capgemini.com/in-en. என்ற வலைத்தளத்தில் இந்திய கேப்ஜெமினி பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *