வாழ்வியல்

டெங்குவுக்கு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாமா?

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகிறவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களுக்கு ரத்தக்கசிவு நோய் மற்றும் `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ ஏற்படலாம். அதாவது தட்டணுக்கள் குறைந்து, நுரையீரல் கூடு பகுதியில் நீர் தேங்கும்போது `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்தத் தருணத்தில் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. எனவே மருத்துவக் கண்காணிப்பிலிருந்து உரிய நேரத்தில் உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலை ஏற்படாமல் காப்பாற்ற முடியும். சுய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காய்ச்சல் வந்தவுடனேயே மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்ட ஒருவருக்கு மீண்டும் வருமா?

நிச்சயமாக வரலாம். ஆனால் ஏற்கெனவே வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் வராது. டெங்குவில் டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகை வைரஸ்கள் உள்ளன.

மீண்டும் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் என்னென்ன?

டெங்கு காய்ச்சல் வந்து குணமாகிவிட்டவரை `ஏடிஸ்’ கொசு கடித்தால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது முறை வரும் டெங்கு முன்பு வந்ததைவிடத் தீவிரமாக இருக்கும்.

நன்றி : விகடன் – லட்சுமணன்.ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *