வர்த்தகம்

கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி பயிற்சிக்கு கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு

கேம்பிரிட்ஜ் ஆங்கில மொழி பயிற்சிக்கு கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு

டி.கே.அருணாச்சலம் தகவல்

சென்னை, நவ. 20

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கேம்பிரிட்ஜ் அசெஸ்மெண்ட் இங்கிலீஷ், புதுமையான கற்றல் முறைகளை வழங்கும் சென்னையைச் சேர்ந்த கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது என்று அதன் தெற்காசிய மண்டல இயக்குனர் டி.கே. அருணாச்சலம் தெரிவித்தார்.

‘‘கேம்பிரிட்ஜ் இங்கிலீஷ் கடந்த சில வருடங்களாக ஆங்கிலமொழி கற்றலில் முனைப்புடன் கவனம் செலுத்தி வருகிறது; பள்ளிகளில் புதுமையான கற்றல் முறைகளை வெற்றிகரமாக வழங்கிக் கொண்டிருக்கும் கிரிசாலிஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம்” என்றார் டி.கே. அருணாச்சலம்

இன்றைய கல்விச்சூழலில் உள்ள சவால்களை கடந்து, பள்ளிக்கல்வியில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி வரும் கிரிசாலிஸ், ஒவ்வொரு மாணவருக்குள்ளும் இருக்கும் மனிததிறன்களை வெளிக்கொணருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுமார் 19 ஆண்டுகளாக அதிநவீன ஆராய்ச்சி மற்றும் புதுமையான செயல்பாடுகளோடு இயங்கிவரும் கிரிசாலிஸ்-ல் 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.முறையான மாற்றத்தை உருவாக்கும் திங்க்ரூம் திட்டத்தை 900-த்திற்கும் அதிகமான பள்ளிகளுக்கு வழங்கி, கிரிசாலிஸ் அந்த பள்ளிகளோடு இணைந்து செயலாற்றியுள்ளது.

இந்த பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் இடைவெளியற்ற தொடர் கற்றலுக்காகவும், மாணவர்களின் சமூக மற்றும் உணர்வு சார்ந்த நலன்களை உறுதி செய்யவும் கிரிசாலிஸ் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது என்று கிரிசாலிஸ் நிறுவனர் சித்ரா ரவி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *