வர்த்தகம்

கடன் பெறுபவரையும் வழங்குபவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கும் ‘பட்டி லோன்’

சென்னை, ஜன.11–

பெங்களூரூவைச் சேர்ந்த ‘பட்டி லோன்’ தனி நபர் கடன் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம், கடந்த செப்டம்பர் 2019 –ல் துவங்கி, 15 மாத காலத்திற்குள், ரூ.6640 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட கடன் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடன் விண்ணப்பங்களைப் பெற்று வரும், பட்டி லோன், இந்தியாவின் சிறந்த கடன் வழங்கும் நிறுவனமாக அடமானம் இல்லா தனி நபர் கடன் வழங்கி வருகிறது.

பட்டி லோன் நிறுவனத்தில் தனி நபர் கடனுக்கு விண்ணப்பிப்பது எளிதானது, உடனடியாக மேற்கொள்ளலாம் மற்றும் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. 22 வயதுக்கு மேற்பட்டவர்கள், சம்பளம் பெறுபவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் இந்த தளத்தில், ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு விண்ணப்பதாரர்கள், ஒரு டிஜிட்டல் படிவத்தை நிரப்ப வேண்டும் மற்றும் கடன் விண்ணப்பத்தில் பான் கார்டு விவரங்களை வழங்கவேண்டும் என்று இணை நிறுவனர் ஸ்ரீகாந்த் ரெட்டி தெரிவித்தார்.

கடன் வழங்குபவர்களை ஒருங்கிணைக்கும் பட்டிலோன் நவீன தொழில்நுட்பம் மூலம் இதனிடம் தனிநபர் கேட்கும் கடன் விண்ணப்பங்களை பட்டி லோன் சரிபார்த்து கடன் வழங்க பரிந்துரை செய்கிறது. இதன் சரிபார்ப்புச் செயல்முறை வாடிக்கையாளர்கள் மற்றும் கடன் வழங்குநர் இருவருக்கும் இடையே வீணாகும் நேரத்தை குறைக்கிறது. கடனளிப்பவர்களுக்கு விரைவாக கடன்களை வழங்குவதற்கும் இது உதவுகிறது, ‘பட்டி லோன்’ என்பது டிஜிட்டலில் மட்டுமே கடன் கிடைக்கும் கடன் தளமாகும், இதை இணையம் மற்றும் ஆன்ட்ராய்டு செயலியின் மூலம் பதி விறக்கம் செய்தால் சலுகை புள்ளிகள் மூலம் கூடுதல் பலன் வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *