செய்திகள்

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் 742 புள்ளிகள் சரிவு

மும்பை, மார்ச் 4–

பங்குச்சந்தை வணிகம் இன்று சரிவுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் மேலும் சரிவடைந்துள்ளன.

சென்செக்ஸ் 742 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகளும் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 742 புள்ளிகள் சரிந்து 50,839.35 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இது மொத்த வர்த்தகத்தில் 1.19 சதவிகிதம் சரிவாகும்.இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 200 புள்ளிகள் சரிந்து 15,074 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 1.15 சதவிகிதம் சரிவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *