செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவிலில் சிட்லபாக்கம் ராசேந்திரன் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

சிங்கப்பெருமாள் கோவிலில் சிட்லபாக்கம் ராசேந்திரன் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்:

தேர்தல் பொறுப்பாளர் பா.வளர்மதி பங்கேற்றார்

ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா ஏற்பாடு

செங்கல்பட்டு, நவ.22

செங்கல்பட்டு அண்ணா தி.மு.க. மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கவுஸ்பாஷா ஏற்பாட்டின் பேரில், சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் தலைமை வகித்தார்.

இதில் மண்டல தேர்தல் பொறுப்பாளரும், கழக இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி கலந்து கொண்டு தேர்தல் வியூகம் குறித்து அண்ணா தி.மு.க.வினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

அம்மாவின் நல்லாசியுடன் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தன்னுயிரை துச்சமாக நினைத்து இந்த கொரோனா காலத்தில் களத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து நல்ல பல திட்டங்களை வாரி வழங்கி வருகின்றனர்.

அண்ணா தி.மு.க.வின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்ய வேண்டும். தொண்டர்கள் ஒற்றுமையுடனும், விசுவாசத்துடன் செயல்பட்டால் நம்முடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்த்த அனைவரும் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் ச.கணிதாசம்பத், முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் கே.ஆறுமுகம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் இ.சம்பத்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.கஜா என்கிற கஜேந்திரன், செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட தலைவர் எம்.ஜி.கே.கோபிகண்ணன், மறைமலைநகர் நகர இளைஞர் பாசறை தலைவர் ப.பாலா என்கிற பாலமுருகன், காட்டாங்கொளத்தூர் கனி என்கிற கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *