நாடும் நடப்பும்

பூத்துக் குலுங்கும் தமிழகம்: அண்ணா தி.மு.க.வின் முத்தாய்ப்பான அரசாட்சி பாரீர்!

* தைபூசம் விடுமுறை * நீர் மேலாண்மை திட்டங்கள்

பயிர் உயர கோன் உயர்ந்தது: உறுதி செய்தார் எடப்பாடி பழனிசாமி

பூத்துக் குலுங்கும் தமிழகம்:

அண்ணா தி.மு.க.வின் முத்தாய்ப்பான அரசாட்சி பாரீர்!

நாளை தை பிறக்கிறது, இது தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்த நம்பிக்கை நாளாகும்! அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிக பெரியவர்கள் வரை, ஏன் குடும்பத் தலைவரும் இதில் இருந்து நம்பிக்கை பெறுவது அறிந்ததே!

தை பிறந்தால் உண்மையில் வழி பிறக்கிறதா?

சங்க காலம் முதலே தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் ஒன்று விவசாயமாகும். முற்காலத்தில் வரப்புகள் தான் பாதையாக இருந்து இருக்கவேண்டும்.

சோழர்காலத்தில் மன்னனை வாழ்த்திப் பாடுவதாக அமைந்துள்ள ஒளவையாரின் இந்த வரிகள்:

‘வரப்புயர நீர் உயரும்;

நீர் உயர நெல் உயரும்;

நெல் உயர குடி உயரும்;

குடி உயர கோன் உயரும்;

கோன் உயர நாடு உயரும்’

என்று கூறினார் அல்லவா. அதன் பொருள் விவசாய நிலத்திற்கு நீர்வரத்து அதிகரித்தால் நெல் அறுவடையும் அதிகரிக்கும்! அப்படிப்பட்ட நீர் மேலாண்மை ஞானம் கொண்ட ஆட்சியாளரை கொண்ட மாநிலம் நல்ல ஆட்சியாளரை கொண்டு இருப்பதாக அகிலமே போற்றும் என்று சுட்டிக்காட்டுகிறார் ஔவையார்.

இதைப் புரிந்து கொண்டவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவர் வழியில் வந்த தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆவார்.

குடிநீர் சவால்கள்

புதிய வீராணத்தை கொண்டு வந்து சாதித்து தமிழகத்தின் வறட்சி பகுதியாக இருந்த பல பகுதிகளில் விவசாயத்தையும் அம்மாநிலத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர்ப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டார் ஜெயலலிதா.

கடல் நீரை குடிநீராக்கி அதில் வெற்றியும் கண்டார். ஜெயலலிதா வழியில் எடப்பாடியும் ஓ.பன்னீர் செல்வமும் அதன் திறனை இரட்டிப்பாக்கி விட்டனர்.

அப்படி சென்னைக்கு தண்ணீர் வந்ததும் அதில் பெரும்பகுதி வீணாக கடலில் கலந்து விடுகிறது. அல்லது வேறு விதங்களில் வீணாகி விடுகிறது என்பதை கண்ட எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ‘தேர்வாய் கண்டிகை’ புதிய நீர் தேக்கத்திற்கு உயிர் கொடுத்தனர்.

இது சென்னைவாசிகளின் அதிமுக்கிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட திட்டமாகும். குறிப்பாக எம்.ஜி.ஆர். கொண்டுவந்த கிருஷ்ணா நதிநீர் திட்டத்து நீரை வீணாகவிடாமல் சேமித்து வைத்துக் கொள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ‘தேர்வாய் கண்டிகை’ மற்றும் ‘கண்ணன் கோட்டை’ ஆகிய இரு ஏரிகளை இணைத்து ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய நீர் தேக்க திட்டம் இது.

முன்பு ஜெயலிதா கண்ட கனவு திட்டம் ஆகும். அதை சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா திமுக அரசு நடைமுறைப்படுத்தி விட்டது. இத்திட்டத்தின் சிறப்பை உணர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரில் வந்து இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த நீர்தேக்கம் 1485 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு சென்னைக்கு தேவையான 15 நாட்களுக்கான நீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

சென்னையின் குடிநீர் தேவையை மட்டுமா பூர்த்தி செய்யும்? சுற்றுப் பகுதியில் உள்ள 1000 ஏக்கர் விவசாய நிலங்களும் அல்லவா பாசன வசதி பெற்று உயிர் பெறும்.

ஆனால் நகரமயமாகி வருவதால் இந்த பகுதியில் பாசன வசதிகள் 700 ஏக்கர் வரை தான் இருக்கிறது. இப்படி விவசாயத்திற்கு தேவையான நீர் வசதி வந்துவிட்டதால் விவசாயம் செழிக்கும்; பயிர் உயரும்!

அப்படி பசுமைமயமாய் சாகுபடி வசதி இருக்கிற போது, நகர்மயத்தின் வேகம் குறைந்து விடும். ஆக ஔவையார் கண்டது போல் நீர் உயர விவசாயம் பெருகும்; அதன் காரணமாக நாடெங்கும் மகிழ்ச்சி பொங்கும் என்பதை இன்றைய தலைமுறை பார்க்கிறது. அவரின் கூற்றில் இருக்கும் புலமையை அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டது.

விவசாயம் செழித்தால் ஏழை விவசாயிகள் இல்லங்களில் செல்வம் செழிக்கும். அவர்கள் வறுமையின்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்தால் அந்த புரட்சியை செய்யும் தலைவரே மக்கள் நல ஆட்சி செய்பவர் என்று அங்கீகரிக்கப்பட்டு மிக பாராட்டுக்குரிய ஆட்சியாளராக போற்றப்படுவார் என்று அன்றே ஔவையார் சுட்டிக்காட்டியதை எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இன்று தமிழகத்தில் நல்லாட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் அதற்கு நல்ல உதாரணங்களாக இருக்கிறார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றால் உண்மையில் பிரகாசமான எதிர்காலம் வர இருப்பதாக கூறப்பட்டது என்று மட்டுமில்லை. அதன் பின்னணியும் ‘உண்மையில்’ வழி பிறக்கும் என்பது தான் உண்மை.


தைபூசத்தின் வரலாறு

மேலும் தை மாதம் தமிழர்களின் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாளும் இதில் அடங்கியிருக்கிறது. தைப்பூச தினமே உலக சிருஷ்டியின் ஆரம்பம் என்பதும் நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும், அந்த ஐதீகத்தின் காரணமாக அந்நாளில் துவக்கப்படும் அனைத்து நல்ல காரியங்களும் வெற்றி என்று கூறப்படுகிறது.

தை சரி, அது என்ன பூசம்? புஷ்யம் அதாவது புஷ்டி அது தான் பலம்!

தை மாதத்தில் தமிழ் பஞ்சாங்கம்படி பத்தாவது மாதமாக இருக்கும் இத்தை மாதத்தில் ‘பூஸா’ மாதத்தில் என்றும் அறியப்படும் மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் ஒருங்கே தோன்றிய நாளில் தான் அன்னை பராசக்திக்கும் பரமசிவனுக்கும் மகனாக முருகப்பெருமான் வணங்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டிய உகந்த நாளாக கருதப்பட்டு, அதாவது உலகம் பிறந்த நன்னாள் என்று கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும்.

மொத்தத்தில் தை பிறப்புடன் முருகப் பெருமானின் பெருமைகளை உலகம் பிறந்த நன்னாளாக கருதப்படும் தை பூசமும் வரும் நன்னாள் இருப்பதால் அன்று புது காரியங்களை துவங்கலாம் என்று காத்திருப்பவர்களுக்கு நம்பிக்கை தந்த வார்த்தைகள் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதாகும்.

தமிழகம் சிறக்க நீர் மேலாண்மை, தமிழர் பாரம்பரியம் வரும் தலைமுறைகளும் அறிந்து அதன் சாராம்சங்களை தங்கள் வாழ்வுடன் இணைத்துக் கொண்டாட சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த புனிதமான ‘தைப்பூச’த் திருநாளை அரசு விடுமுறை தினமாக அறிவித்தும் உள்ளார்.

இப்படியாக தமிழர் பெருமையையும், தமிழகத்தில் செழிப்பையும் பாதுகாத்து போற்றும் அண்ணா தி.மு.க. அரசு நிரந்தரமாய் தொடர வேண்டும் என்று தமிழகம் முடிவு செய்திருப்பது சரியான முடிவு என்று உலகமே பாராட்டுகிறது.


அறுவடை முடிந்தது, வழி பிறந்தது

நல்ல நீர் மேலாண்மை காரணமாக பயிர் ஓங்கி வளர்ந்தால் அறுவடைக்கு தயாராகிவிடும் போது அதை வரப்பு பாதைகளையும் மறைத்து மூடி விடும் அல்லவா? அச்சமயத்தில் வரப்பில் நடந்து செல்ல முடியாத நாட்களில் கண் முன் இருந்த குறுக்கு வழி காணாமல் போய் விட்டதே! என கவலைப்படவா முடியும், அங்கே இருக்கும் பயிர் செழிப்பினை கண்டு மனம் ஆனந்தத்தில் அல்லவா ஆட்டம் போடும்.

பொங்கல் திருநாள் வரும்போது தை பிறப்பின் முதல் நாளில் அறுவடை செய்யப்பட்டு விட்ட பிறகு, செல்வ செழிப்பை கை மேல் பலனாக தந்ததுடன், முன்பு இருந்த வரப்பு வழி குறுக்கு பாதையும் திரும்ப உபயோகத்திற்கு கிடைத்து விடுகிறது!

ஆக பணப்பற்றாக்குறைகள் நீங்கி, மங்கல காரியங்களுக்கு தேவையான நிதி ஆதாரம் கையில் பெற்றுத் தருகிறது தை, அதன் தொடக்க நாட்களைத் தான் தமிழர் பொங்கல் திருவிழாவாக கொண்டாடி மகிழ்கிறோம்!

இப்படியாக ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற கூற்றின் பின்னணியில் தமிழர் வாழ்வியல் பொதிந்தும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *