செய்திகள்

“கோ பேக் மோடி” என பதிவிட்ட நடிகை ஓவியா மீது தேச துரோக வழக்கு?

சென்னை, பிப். 15–

“கோ பேக் மோடி” என டுவிட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியா மீது, தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று போலீசில் பாஜக புகார் அளித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகை ஓவியா பல்வேறு திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட , பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிலையில், நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்து ‘கோ பேக் மோடி’ என்று தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது தமிழகத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகை ஓவியாவை 5 லட்சத்து 51 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். அவரது ‘கோ பேக் மோடி’ பதிவை, 17 ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். 58 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

பாரதீய ஜனதா புகார்

இந்நிலையில், நடிகை ஓவியாவின் இந்த ட்வீட் குறித்து, பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர், சிபிஐசிஐடி அலுவலகத்தில் உள்ள சைபர் செல்லுக்கு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை குறிப்பிட்டு, பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் விதமாக, நடிகை ஓவியா ‘GO BACK MODI’ எனப் பதிவிட்டுள்ளார். எனவே நடிகை ஒவியாவின் பதிவு குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகை ஓவியா மீது தேசதுரோக வழக்கு, இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துதல், அவதூறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *