வாழ்வியல்

பாரதியார் பிறந்த தினம்

பாரதி என்கின்ற போதினிலே, அவர்

பாடல்கள் கேட்குது காதினிலே!

வீரம் பிறக்குது நெஞ்சினிலே! அதில்

வெற்றி கிடைக்குது நேரினிலே!!

*

வலிமை நிறைந்தது ! உயர்

இனிமை கலந்தது !!எளிமை ,

பொருள் ஆழம் மிகுந்த எழில்

சொற்கள் கொண்டது அவர் பாடல்!!

*

பன்மொழி கற்ற பாவலராம்! அதில்

நன்மொழி தமிழென்ற நாவலராம்!!

என்மொழி போல் எந்த மொழியுமில்லை!

என்று தமிழ்மொழி காத்த காவலராம்!

*

குழந்தைகள் பாட்டுடன் குயில் பாட்டு! மனம்

குதூகலமடையும் அதைக் கேட்டு!!

கொஞ்சிட கெஞ்சிட மிஞ்சிடவும் அவர்

கொடுத்தது நல் கண்ணன் பாட்டு!!

*

உள்ளத்தில் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும்! அதில்

உயர்ந்த லட்சியங்கள் அணிவகுக்கும்!!

நல்ல தமிழ் பாடல் அதில் சுரக்கும்! அந்த

பாடல்கள் பாரதி பெயர் உரைக்கும்!!

*

நாளும் கோளும் உள்ளவரை உலகில்

நற்றமிழ் இருக்கும் இறுதி வரை!!

நாட்டு பக்தியினை பாட்டு வழி தந்த

பாரதி வாழிய என்று உரை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *