பாரத் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மாணவர்களுக்கு பட்டங்கள்:
தேசிய தணிக்கை அங்கீகார கவுன்சில் டைரக்டர் எஸ்.சி. சர்மா வழங்கினார்
சென்னை, நவ. 30
பாரத் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சேலையூர் வளாகத்தில் நடைபெற்றது. தேசிய தணிக்கை அங்கீகார கவுன்சில் (நாக்) டைரக்டர் பேராசிரியர் எஸ்.சி. சர்மா விழாவை துவக்கி வைத்து, மாணவர்ளுக்கு பட்டங்களை ஆன்லைனில் வழங்கினார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் வி.கனகசபை வரவேற்றார். இணை துணை வேந்தர் கே.விஜயபாஸ்கர் ராஜு வருடாந்திர அறிக்கையை வாசித்தார்.
வேந்தர் டாக்டர் முகமது ரேலா, சாதனை பட்டம் பெற்ற மாணவர்களை அறிமுகம் செய்தார். என்ஜினியரிங், தொழில்நுட்பம், மருத்துவ விஞ்ஞானம், பல் மருத்துவம், நர்சிங், பிசியோதெரபி, சட்டம், கலை அறிவியல் மற்றும் இது சார்ந்த பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இதன் கூடுதல் பதிவாளர் ஆர்.ஹரி பிரகாஷ் சிறப்பு விருந்தினர் ‘நாக்’ அமைப்பு டைரக்டர் எஸ்.சி. சர்மா பற்றி அறிமுகம் செய்தார். அவர் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் பட்டங்களை வழங்கினார். பதிவாளர் எஸ். பூமிநாதன் நன்றி தெரிவித்தார்.
இணை துணை வேந்தர்கள் ஆர்.எம். சுரேஷ் (கல்வி), கே.விஜய பாஸ்கர் ராஜு (ஆராய்ச்சி) ஆகியோல் விழாவில் கலந்து கொண்டனர்.