பல்வேறு வியாதிகளுக்கு சித்த மருத்துவத்தில் வேப்பிலை மருந்தாக உதவும் என்பது நமக்கு தெரியும். வேப்பிலை நாவுக்கு கசப்பாக இருந்தாலும், உடலுக்கு இனிப்பையும் பாதுகாப்பினையும் தரும் என்பது நம் முன்னோர் கண்டறிந்த உண்மை.
இன்னும் சொல்வதானால், வேப்பிலை பல நற்குணம் நிறைந்ததாகும். சித்த மருத்துவத்தை பொருத்த வரையில், அது பல நோய்களை குணப்படுத்தும் குணம் கொண்ட சக்தி வாய்ந்த மூலிகையாகும்.
4500 ஆண்டுகளுக்கு முன்பே இது பல்வேறு உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் நிறைய காணப்படுகின்றன.
சித்த மருத்துவத்தில், வேப்பிலையானது, பித்தம் மற்றும் கபம் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
இது தவிர வேப்பிலையின் மேலும் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன: இரத்தத்தை சுத்தப்படுத்தும், நச்சுகளை நீக்கும், பூச்சி கடியையும் அல்சர்களையும் குணப்படுத்தும், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களால் உடல் பாதிப்படையாமல் காக்கும், புண்கள், தீக்காயங்கள், இன்ஃபெக்க்ஷன் மற்றும் இன்ன பிற சரும பாதிப்புகளை குணப்படுத்தும். இன்ஃபெக்க்ஷன் ஏற்படுத்தும் பேக்டீரியாவை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வேப்பிலையின் இத்தனை நன்மைகள் இருந்தாலும், தினசரி வாழ்வில் நீங்கள் அதனை பயன்படுத்தக் கூடிய சிறப்பான 10 வழிகளை இங்கு காண்போம்.
* நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
வேப்பிலையானது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. அதில் உள்ள ஆன்டிபேக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் குணங்களை முழுமையாக பெற அதனை டீ வடிவில் அருந்தலாம்.
சில வேப்பிலைகளை நசுக்கி அதனை வெதுவெதுப்பான நீரில் போட்டு அதனை அருந்துங்கள். இதன் மூலம் உங்களது பொதுவான உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
* உடலில் இருந்து நச்சுக்களை நீக்க
நச்சுக்களை நீக்குவதில் சிறப்பு பெற்றது அது. இதில் கசப்பு தன்மை அதிகம் உள்ளதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுறுசுறுப்பாக்கி நச்சுக்களை நீக்க செய்கிறது. வேப்பிலையை பொடி செய்து பசு நெய்யில் கலந்து சாப்பிடலாம். அல்லது வேறு வடிவிலும் எடுத்துக் கொண்டால் உடலில் இருந்து நச்சுக்களை நீக்கலாம்.