வாழ்வியல்

சவ்வரிசி சாப்பிட்டால் எலும்புகளை வலுவுள்ளதாக்கும்

சவ்வரிசி சாப்பிட்டால் எலும்புகளை வலுவுள்ளதாக்கும்; மூட்டுவலியைக் குறைக்கும்; பதட்டத்தைக் தணிக்கும்

சவ்வரிசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. இதை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதால், என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.

சவ்வரிசியில் முழுக்க முழுக்க கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.

மிக எளிதாக சீரணமாகக்கூடிய உணவுகளில் ஒன்று. அதனால் சவ்வரிசியில் செய்த உணவுகளை தாராளமாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். சவ்வரிசியை பால் அல்லது தண்ணீரில் நன்கு வேகவைத்தோ அதோடு சர்க்கரையோ அல்லது மசாலாவோ அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்து சாப்பிடலாம்.

அதிக ஆற்றலைத் தரக்கூடியது. காலை சிற்றுண்டிக்கு சவ்வரிசி எடுத்துக்கொள்வது நல்லது. அது அன்றைய நாள் முழுக்கவும் தேவையான ஆறு்றலை நமக்கு வழங்கும்.

ஒரே வாரத்தில் ஒல்லியாக இருக்கும் தேகம், இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு மிகச்சிறந்த தேர்வு சவ்வரிசி தான்.

நேரத்துக்கு சாப்பிட முடியாமல் இருப்பவர்கள் சவ்வரிசியை சிறிது சாப்பிட்டால் போதும். நேரத்துக்கு முறையாக பசிக்க ஆரம்பிக்கும். நேரத்துக்கு சரியாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே இயற்கையாகவே எடை கூடும்.

எலும்புகளை வலுவுள்ளதாக்கும். மூட்டுவலியைக் குறைக்கும். பதட்டத்தைக் தணிக்கும். உடற்பயிற்சிக்கு முன், பின் என எப்போதும் இதை உட்கொள்ளலாம்.

சவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *