வர்த்தகம்

பிலீவ் இந்தியாவுடன் ட்ரீம் வாரியர் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம்

சென்னை, பிப். 15

இந்தியாவில் இசை விநியோக வர்த்தகத்தை தொடர்ந்து முன்னெடுத்துவரும் முன்னணி டிஜிட்டல் இசை இசைக் கலைஞர்கள் சேவை நிறுவனமான, பிலீவ், சென்னையைச் சேர்ந்த முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை அறிவித்தது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தென்னிந்திய திரைத் துறையின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தேசிய விருது பெற்ற ஜோக்கர் (2016) படம் தயாரித்த இத்தயாரிப்பு நிறுவனம், திரைத்துறையில் சகோதர்களான எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர். பிரபு ஆகியோரது பல்துறை அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டதாகும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இதுவரை உலகளவில் 9 படங்களையும் 1 வலைத் தொடரையும் தயாரித்து விநியோகித்துள்ளது.

பிலீவ் உலகெங்கிலுமுள்ள அனைத்து உள்ளுர் சந்தைகளிலும் கலைஞர்களுக்கும் இசை நிறுவனங்களுக்கும் அவர்களின் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் அவர்களின் பார்வையாளர்களையும் தொழில் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவுகின்ற ஒரு முன்னணி டிஜிட்டல் இசை நிறுவனம். ஒரு மிகச்சிறந்த தொழில்நுட்ப அமைப்பான இது அதன் கூட்டாளிகளுக்கு உலகளாவிய விநியோகம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளை வழங்கி வருகிறது. இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.believemusic.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *