செய்திகள்

இறந்தவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47 லட்சம் திருடிய வங்கி மேலாளர் கைது

சென்னை, டிச.22

இறந்தவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47 லட்சம் திருடிய வங்கி மேலாளர் வினோத் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். திருவான்மியூரை அடுத்த வெட்டுவான்கேணியில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக வேலை பார்த்தவர் வினோத் (வயது 33) . அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்த விபரம் மேலாளர் வினோத்துக்கு தெரிய வந்தது. இறந்த வாடிக்கையாளரின் ஏடிஎம் கார்டுபோல் போலியாகத் தயாரித்து அதைக்கொண்டு வினோத் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.47 லட்சத்தை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக இறந்தவரின் வாரிசுகள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் வினோத்தை கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி வினோத் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *