வாழ்வியல்

வாழைப்பூவை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் அல்சர் புண்கள், இதய நோய்கள் விரைவில் குணமாகும்

வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது.

அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். இந்த அல்சர் பெரும்பாலும் காலை உணவுகளை தவிற்பவர்களுக்கும் அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும் வாரத்திற்கு ஒருமுறை வழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உணவை சாப்பிட்டு வந்தால் இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர அடிக்கடி வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம் வயிற்றுப்போக்கு கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு அதீத வயிற்று போக்கு ஏற்படுகிறது. இந்த வயிற்றுப் போக்கால் உடலின் அத்தியாவசிய சத்துக்கள் இழப்பு உண்டாகிறது.

வாழைப்பூவை வயிற்றுப்போக்கு நின்ற பிறகு பக்குவம் செய்து சிறிய அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெற முடியும். கண்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்பார்வை என்பது மிகவும் அவசியம். வாழைப்பூவில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *