சினிமா

“பாலா” இந்திப்படம் ரிலீசான 3 வாரத்தில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை

Spread the love

சென்னை, நவ. 26

இந்தி பிரபல டைரக்டர் அமர் கெளசிக் இயக்கத்தில், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘பாலா’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 7ந் தேதி வெளியான இப்படம் முதல் வாரத்தில் ரூ.72 கோடியே 24 லட்சம், 2வது வாரத்தில் ரூ. 26 கோடியே 56 லட்சம், 3வது வாரத்தில் ரூ. 7 கோடியே 7 லட்சம் என இதுவரை மொத்தம் ரூ. 105 கோடி 87 லட்சம் ஈட்டியுள்ளதாகவும் அதன் தயாரிப்பு நிறுவனமான ‘மட்டாக் ஃபிலிம்ஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தேசிய விருது பெற்ற நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவர், முடி உதிரும் “பால்டிங்” என்ற நோயால் பாதிக்கப்பட்டவராக பாலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கருமை நிறமுடைய பெண்ணாக பூமி பெட்னேகர் நடித்துள்ளார்.

பெண்கள் பொதுவாக முடியின் மிது அதிக கவனம் செலுத்துவர். ஒவ்வொருவருக்கும் தங்களது முடியை பற்றி கவலை இருக்கும். வலுவான, நீளமான முடியைப் பெற என்ன செய்ய வேண்டுமோ அதனைத் தவறாமல் செய்வர். உதாரணத்திற்கு, ஒரு பெண்ணின் முடியின் நீளம் குறைவாக இருந்தால், நீளமான முடி வேண்டும் என நினைத்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வர்.

பெண்களுக்கு மட்டும் முடியின் மீது கவலை இல்லை, ஆண்களுக்கும் இதுகுறித்த கவலை இருக்கிறது என ‘பாலா’ திரைப்படம் காட்டுகிறது.

முதலில் வழுக்கை தலை ஆசியரைக் கிண்டல் செய்யும் மாணவராக அறிமுகமாகிறார் (ஆயுஷ்மான் குரானா) பாலா. பின், சில ஆண்டுகள் கழித்து முடி உதிர்ந்து தனக்கு வழுக்கை விழுந்ததால், தனது முடியை திரும்ப பெறுவதற்காக அவர் செய்யும் முயற்சிகளைக் காட்டுகிறது இப்படம். நடிப்பை இவர் யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படத்தை தினேஷ் விஜயன்-ஜியோ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது. சச்சின் ஜிகர், ஜானி, பி ப்ராக் ஆகியோர் இசையமைத்துள்ளனர். மும்பை, லக்னோ ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *