செய்திகள் வாழ்வியல்

சர்க்கரை நோயை தவிர்க்க ‘பாதாம்’ சிறந்த உணவு

Spread the love

கோவை, நவ. 14

ஒவ்வொரு ஆண்டும் உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படும் போதெல்லாம் 72 மில்லியன் இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சாதாரண நோயாக மாறி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இது 2025ம் ஆண்டுக்குள் 134 மில்லியன் மக்களை எட்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்கள், வாழ்வியல் மாற்றம், உடல் நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் உணவு பழக்கங்கள் இந்த நோய்க்கு காரணியாக அமைந்துள்ளது.

இது குறித்து பாதாம் நலவாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

சர்க்கரை நோயை மேலாண்மை செய்யவும், தவிர்க்கவும் சில உணவு பழக்கங்களை மாற்ற வேண்டியது அவசியம். வழக்கமான உணவு பழக்கத்தில் பாதம், மக்கனாஸ், யோகர்ட் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும்.

பாதம் பயன்படுத்துவதால், கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச்செய்ய முடியும். பாதாம் ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. பல்வேறு உடற்பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், சினிமா நட்சத்திரங்கள் பாதம் பயன்படுத்த பரிந்துரை செய்கின்றனர்.

என்று செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *