செய்திகள்

போலீசாரின் சிறப்பான சேவைக்கு கிடைத்த ‘ஸ்கோச்’ தங்க, வெள்ளி விருதுகள்

Spread the love

சென்னை, டிச. 2

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல் துறை தலைமைச் இயக்குநர் ஜே.கே. திரிபாதி ஆகியோர் சந்தித்து, புதுடெல்லியில் ஸ்கோச் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘‘ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்’’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருதும், தூய்மையான காவல் நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட ஸ்கோச் வெள்ளி விருது, காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை ஒப்பீடு செய்து அடையாளம் கண்டறியும் செயலியை உருவாக்கியதற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் வெள்ளி விருது மற்றும் திருநெல்வேலி மாநகர காவல்துறை மூலமாக மக்களை நோக்கி மாநகர காவல் என்ற புதிய திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் வெள்ளி விருது ஆகிய ஸ்கோச் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், உணவு பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குநர் பிரதீப் வி.பிலிப், காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்ப பிரிவு) வினித் தேவ் வான்கடே, சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) ஏ.அருண், காவல்துறை கூடுதல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆர்.தினகரன், காவல்துறை கூடுதல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை துணை ஆணையர் (திருநெல்வேலி மாநகரம்) சரவணன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *