வர்த்தகம்

400 மாணவர் பட்டபடிப்புக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய ‘மேக்மா’ நிதி நிறுவனத்துக்கு விருது

சென்னை, நவ. 18

மேக்மா பின் கார்ப் நிதி நிறுவனத்தின் சமூக நல செயல்பாட்டுக்கு ஏசிப் ஆசியன் லீடர் விருது வழங்கப்பட்டது. இந்த மேக்மா நிறுவனம் ‘எம் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி இதுவரை 400 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதை பாராட்டி இந்த விருது இந்த ‘எம் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தை பாராட்டி இதுவரை 14 விருதுகள் கிடைத்துள்ளது என்று மேக்மா சமூக நலப் பிரிவு தலைவர் கவுசிக் சின்கா தெரிவித்தார்.

ஏழை மாணவ மாணவிகளின் தரமான கல்விக்கு ‘மேக்மா’ நிதி உதவி தொகை வழங்குகிறது. மேல்பட்டபடிப்பு இவர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. தொடர்ந்து கூடுதல் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவ இதன் விருது ஊக்கமளிக்கும் என்று கவுசிக் சின்கா தெரிவித்தார்.

மேக்மா பின் கார்ப் கார்ப்பரேஷன் நிறுவன கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவுகிறது.

இது லாரி டிரைவர்களுக்கு விபத்து இல்லாத வாகன ஓட்டுதல் பயிற்சி அளிக்கிறது.

‘எம் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தில் 400 மாணவருக்கு என்ஜினீயரிங், மருத்துவம், மனித நலம், விஞ்ஞானம், வணிகம், சட்ட படிப்புக்கு உதவித் தொகை வழங்கி உள்ளது.

எம்.கேர் திட்டத்தில் கிராம மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை திட்டத்தை மேக்மா துவக்கி இதுவரை 7 மாநிலங்களில் 20 ஆயிரம் கிராமங்களில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளது என்றார் அவர்.

இது பற்றி அறிய www.magma.co.in வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *