செய்திகள்

குடந்தை மாலியின் 60 ஆண்டு கலைச்சேவையைப் பாராட்டி பொன்னாடை; ‘கலைக்களஞ்சியம்’ விருது

Spread the love

சென்னை, டிச. 4

பாரதி கலைஞர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் 106வது பிறந்த நாள் விழா மயிலாப்பூர் பி.எஸ்.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழவேள் சிவாலயம் மோகன் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.சுமதி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

பிறந்தநாள் நினைவாக சிறந்த நாடக ஆசிரியர் குடந்தை மாலிக்கு கலைக்களஞ்சியம் விருது வழங்கப்பட்டது. அவரது 60 ஆண்டு கலைச்சேவையைக் கவுரவிக்கும் விதத்தில் இந்த விருது. இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வாசுகி கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. மறைந்த பிரபல தொழிலதிபர் ‘சக்தி குரூப்’ பொள்ளாச்சி மகாலிங்கத்தின் முதன்மை செயலர் சி.ரவீந்திரனுக்கு எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் நூற்றாண்டு விழா நினைவுபரிசு வழங்கப்பட்டது.

லஷ்மி கிருஷ்ணசாமி இறை வணக்கம் பாடினார். கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் வரவேற்புரையாற்றினார். கவிஞர் முத்துலிங்கம், மக்கள் குரல் ராம்ஜீ ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிறப்பு விருந்தினராக பத்திரிகை துறை அதிகாரி குணசேகரன் (மலேசியா) நாடகாசிரியர் பங்கேற்றார். பாலாஜி பெயிண்ட்ஸ் உரிமையாளர் சி.ஏ. ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியை சந்திரமோகன், ‘டப்பிங்’ கலைஞர் அனுராதா தொகுத்து வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *