வர்த்தகம்

ஆட்சி மொழி செயல்பபாடு: இந்தியன் வங்கிக்கு மத்திய அரசு விருது

சென்னை, செப். 18–

இந்தியன் வங்கியில் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஆட்சி மொழி பற்றிய ஆன்லைன் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை இதன் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு அறித்தார்.

இந்தியன் வங்கியின் ஆட்சி மொழி துறைக்கு மத்திய அரசின் ஆட்சி மொழி கீர்த்தி புரஸ்கார் விருது கிடைத்ததற்கு இந்த துறை அதிகாரி, ஊழியர்களை பத்மஜா சந்துரு பாராட்டினார். அலகாபாத் வங்கி ஆட்சி மொழி துறை அதிகாரிகளையும் அவர் பாராட்டினார்.

இந்தியன் வங்கி ஊழியர்களுக்கு ஆட்சி மொழி அறிமுகம் பற்றிய வீடியோவை ஆன்லைனில் பத்மஜா சந்துரு துவக்கினார்.

இந்தியன் வங்கியின் எக்சிகியூடிவ் டைரக்டர்கள் எம்.கே.பட்டாச்சார்யா, வி.வி.ஷெனாய், கே.ராமச்சந்திரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தியன் வங்கியின் ஆட்சி மொழி தலைமை மேலாளர் அஜய் குமார் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *